துரோகி.. துரோகி.. தாராபுரம் சத்யபாமாவை தெறிக்க விட்ட ர.ர.க்கள்.! செங்கோட்டையனுக்கு காத்திருந்த ஷாக்!

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: தாராபுரம் இடைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யபாமா வேட்பு மனுத் தாக்கல் செய்த பிறகு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியே புறப்பட்டார். பின்னர் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆனந்த், அருண்ராஜ் ஆகியோர் காரில் புறப்பட்ட போது எதிரே வந்த அதிமுகவினர் துரோகிகள் ஒழிக என முழக்கமிட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

2026 சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் ஆட்சி அமைந்தது. தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் காரணமாக திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விஜய் அரசுக்கு ஆதரவு அளித்தன.

Dharapuram

இதன் மூலம் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை உறுதி செய்யப்பட்ட நிலையில், சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பும் பரபரப்பாக பேசப்பட்டது. அதிமுகவைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக அதிமுகவைச் சேர்ந்த சில எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். பெருந்துறை தொகுதி எம்எல்ஏ ஜெயக்குமார், மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதி எம்எல்ஏ சத்யபாமா, அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். தற்போது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாராபுரம் தனித் தொகுதியில் கடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் சத்யபாமா வெற்றி பெற்றிருந்தார் என்பதையும் கவனிக்க வேண்டு. அவரை எதிர்த்து திமுக சார்பில் இந்திராணி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கௌரி சித்ரா, நாம் தமிழர் கட்சி சார்பில் திவ்யா ஆகியோர் போட்டியிட்டனர். சுமார் 1.99 லட்சம் வாக்குகள் பதிவான இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் சத்யபாமா சுமார் 81 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் இந்திராணி சுமார் 64 ஆயிரம் வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தார்.

தவெக வேட்பாளர் கௌரி சித்ரா சுமார் 46 ஆயிரம் வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திவ்யா 6,026 வாக்குகளையும் பெற்றார். தற்போது இந்த தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மீண்டும் சத்யபாமா களமிறங்குகிறார். திமுக தரப்பில் சுகன்யாவும், அதிமுக தரப்பில் பானுமதி, நாம் தமிழர் கட்சி தரப்பில் கார்த்திகா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதே போல தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளரான லட்சுமணன் போட்டிருக்கிறார்.

நாளை மறுநாள் வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியாக இருக்கிறது. இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் அதிமுக, தவெக வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் திரண்டு வந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர். தமிழக வெற்றிக்காக வேட்பாளர் சத்தியபாமா வந்ததற்குப் பிறகுதான் அதிமுக ஆதரவாளர்கள் அங்கு திரள தொடங்கினர். சத்தியபாமா, அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆனந்த், அருண்ராஜ் ஆகியயோருடன் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்தார்.

அப்போது ஏற்கனவே அங்கு அதிமுகவினர் திரண்டு இருந்த நிலையில் அமைச்சர்களையும் சத்தியபாமாவையும் பார்த்து துரோகிகள், துரோகிகள் ஒழிக என முழக்கமிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை அடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் முழக்கமிட்டவர்களை சமாதானப்படுத்தி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளை அனுப்பி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+