திருப்பூரில் கோர சம்பவம்.. தனியார் பேருந்து கவிழ்ந்து 4 பேர் பலி.. அதிர்ச்சியடைந்த மக்கள்
திருப்பூர்: திருப்பூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே உள்ள பல்லகவுண்டம்பாளையம் பகுதியில் திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கி தனியார் பேருந்து ஒன்று இன்று காலை 9.15 மணியளவில் சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தில் 70 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர். இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்துள்ளது.

அந்த லாரியை தனியார் பேருந்து முந்துவதற்கு முயன்ற போது நிலைதடுமாறி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப் படையினர் மற்றும் போலீஸார் பலத்த காயமடைந்தவர்களை மீட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்துக்கான காரணம் குறித்து ஊத்துக்குளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications