தான செட்டில்மெண்ட் ரூ.2 கோடி நிலம்.. கோர்ட்டுக்கு ஓடிய பெற்றோர்.. திருப்பூர் ஆர்டிஓ செய்த சம்பவம்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, வயதான பெற்றோரை பார்த்துக்கொள்வதாக கூறி ரூ.2 கோடி மதிப்புள்ள 4 ஏக்கர் விவசாய நிலத்தை தனது பெயருக்கு எழுதி வாங்கிக்கொண்டார் மகன்.. சொத்தையும் பிடுங்கிக் கொண்டு, பெற்றோரை வீட்டை விட்டே வெளியேற்றியும் விட்டார்.. கடைசியில் விஷயம் கோர்ட் வரை சென்றுவிட்டது.. நீதிமன்ற உத்தரவில் என்ன சொன்னார்கள் தெரியுமா?

தாராபுரம் அருகே உள்ள தாசர்பட்டியை சேர்ந்தவர் முத்துசாமி. இவருக்கு 76 வயதாகிறது.. இவரது மனைவி புஷ்பாத்தாள். 70 வயதான இவர் உடல்நலக்குறைவு காரணமாக எழுந்து நடமாட முடியாத நிலையில் உள்ளார். இந்த தம்பதிக்கு தண்டபாணி என்ற மகனும், பானுமதி என்ற மகளும் உள்ளனர்.

Gift Settlement Tiruppur RDO Action Parents Property Dispute

பானுமதிக்கு கல்யாணமாகி கணவரை பிரிந்த நிலையில், தனது 2 குழந்தைகளுடன் தந்தை முத்துசாமியுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

செட்டில்மெண்ட் - வாரிசு

இதற்கிடையே, முத்துசாமி தாசர்பட்டி அருகே உள்ள மூண்டுவேளம்பட்டி கிராமத்தில் கடந்த 2002-ம் ஆண்டு 4 ஏக்கர் விவசாய நிலத்தை விலைக்கு வாங்கியிருந்தார். இப்போது அந்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.2 கோடி என கூறப்படுகிறது. வயது முதிர்வு மற்றும் மனைவியின் உடல்நிலை காரணமாக விவசாய நிலத்தை தொடர்ந்து கவனிப்பதில் முத்துசாமி தம்பதி சிரமப்பட்டு வந்தனர்.

அப்போது மகன் தண்டபாணி, "இனிமேல் நான் உங்களையும், குடும்பத்தையும் பார்த்துக்கொள்கிறேன்" என்று பெற்றோரிடம் உறுதி அளித்துள்ளார்.. மகனின் வார்த்தையை நம்பிய முத்துசாமி, தன்னுடைய 4 ஏக்கர் விவசாய நிலத்தை தண்டபாணியின் பெயருக்கு செட்டில்மெண்ட் செய்து கொடுத்துள்ளார்.

ஆனால், நிலம் தனது பெயருக்கு வந்ததுமே தண்டபாணி நடவடிக்கையில் மாற்றம் தெரிந்துள்ளது.. பெற்றோரை பார்த்துக்கொள்வதாக சொல்லிவிட்டு, அவர்களையும், தனது சகோதரி பானுமதியையும், அவரது 2 குழந்தைகளையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டாராம்..

4 ஏக்கர் 2 கோடி சொத்து

இதனால் அதிர்ச்சியடைந்த முத்துசாமி, மகனுக்கு எழுதிக்கொடுத்த செட்டில்மெண்ட் ஆவணத்தை ரத்து செய்து, தனது 4 ஏக்கர் நிலத்தை மீண்டும் தனக்கே பெற்றுத்தர வேண்டும் என தாராபுரம் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்தார். பிறகு சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், முத்துசாமி தம்பதியினர் மூத்த குடிமக்கள் என்பதால், அவர்களின் புகார் குறித்து 12 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாராபுரம் வருவாய் கோட்டாட்சியருக்கு உத்தரவிட்டது.

ஆர்டிஓ அதிரடி

இதையடுத்து வருவாய் கோட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜா விசாரணை நடத்தினார். விசாரணையில், பெற்றோரை பார்த்துக்கொள்வதாக அளித்த உறுதியை நம்பியே முத்துசாமி தனது நிலத்தை மகனுக்கு எழுதிக்கொடுத்தது தெரியவந்தது.

இதன் அடிப்படையில், முத்துசாமி மகன் தண்டபாணிக்கு எழுதிக்கொடுத்த செட்டில்மெண்ட் ஆவணத்தை ரத்து செய்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டார். மேலும், 4 ஏக்கர் விவசாய நிலத்தையும் மீட்டு முத்துசாமியிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.

இதற்கான உத்தரவு முத்துசாமி, அவரது மகள் பானுமதி மற்றும் அவர்களது வழக்கறிஞர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது. வயதான பெற்றோரை பார்த்துக்கொள்வதாக கூறி சொத்தை பெற்றுக்கொண்ட மகனே, பிறகு அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றியதாக கூறப்படும் இந்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தான செட்டில்மெண்ட் ரத்து

தாராபுரம் என்றில்லை.. பெரும்பாலும் பல்வேறு இடங்களில் இப்படித்தான் கொடுமை நடக்கிறது. குடும்ப சூழல்கள் காரணமாக, தங்களது வாரிசுகளுக்கு பெற்றோர்கள் செட்டில் மென்ட் பத்திரத்தை எழுதி தந்துவிடுகிறார்கள்.. தாய்-தகப்பனை கடைசி காலத்தில் கவனிக்காமல் புறக்கணித்துவிடுகிறார்கள். இதன்காரணமாக சாப்பாட்டுக்குகூட வழியில்லாமல், தங்குவதற்கும் இடமில்லாமல், மாவட்ட கலெக்டர்களிடம், அந்த பெற்றோர்கள் கண்ணீருடன் புகார் தரும் பரிதாபங்கள் ஏற்படுகின்றன.

இதற்கெல்லாம் கடந்த வருடம் சுப்ரீம் கோர்ட் ஒரு முடிவு கட்டியது.. அதில், "பிள்ளைகள் கவனிக்காவிட்டால் "பெற்றோர் பராமரிப்பு மற்றும் நலவாழ்வு மற்றும் மூத்த குடிமக்கள் சட்டத்தின்"படி பிள்ளைகளுக்கு பெற்றோர் எழுதி கொடுத்த சொத்து ஆவணத்தை ரத்து செய்யலாம். சொத்துகளை எழுதி வைத்தவருக்கு தேவையான அடிப்படை வசதிகளை, சொத்துக்களை பெற்றவர் செய்ய வேண்டும். அப்படி செய்ய தவறினால், சொத்துகளை எழுதிகொடுத்தது செல்லாது என்று அறிவிக்கமுடியும்" என அதிரடியாக உத்தரவிட்டது நினைவிருக்கலாம்.

சொத்துக்களை மொத்தமாக, பிள்ளைகளுக்கு எழுதி தந்துவிட்டு, நடுத்தெருவில் விழிபிதுங்கி நிற்கும் எத்தனையோ வயதான பெற்றோர்களுக்கு, சுப்ரீம்கோர்ட்டின் இந்த தீர்ப்பானது, வயிற்றில் பாலை வார்த்து வருகிறது... அப்படியிருந்தும்கூட, ஆங்காங்கே இந்த தாராபுரம் சம்பவம் போல துயரங்கள் நடக்கத்தான் செய்கின்றன..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+