திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆடைகளை களைந்து.. மாணவிகளுக்கு மெடிக்கல் "செக்கப்" செய்த டாக்டர்.. குன்னத்தூர் குமுறல்.. என்ன நடந்தது

குன்னத்தூர் பள்ளி மாணவிகள் விவகாரத்தில் விசாரணை துவங்கி உள்ளது

Google Oneindia Tamil News

திருப்பூர்: ஒரு ஆண் டாக்டர், பள்ளி மாணவிகளின் ஆடைகளை களைந்து மெடிக்கல் செக்கப் நடத்தினாராம்.. இந்த விஷயம் தெரிந்து பெற்றோர்கள் கொந்தளித்து, போராட்டம் வரை சென்றுவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை திருப்பூர் மாவட்டத்தில் ஏற்படுத்தி உள்ளது.

குன்னத்தூர் அருகே கருமஞ்சிறையில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. மத்திய அரசின் சீர்மிகு திட்டத்தின் கீழ் அங்கு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த பள்ளிக்கு ஆண் டாக்டர் ஒருவர் சென்றுள்ளார். மத்திய அரசின் சார்பாக சிறார் நலத்திட்ட பரிசோதனைக்காக இவர் மட்டுமே அங்கு சென்றிருக்கிறார்...

அவங்களை போல நல்லா படிக்கணும்னு சிஸ்டர்ஸ் சொல்லுவாங்க.. மதமாற்றம் பொய்.. தஞ்சை பள்ளி மாணவிகள் பேட்டி!அவங்களை போல நல்லா படிக்கணும்னு சிஸ்டர்ஸ் சொல்லுவாங்க.. மதமாற்றம் பொய்.. தஞ்சை பள்ளி மாணவிகள் பேட்டி!

செக்கப்

செக்கப்

அவருடன் வேறு டாக்டர்கள், குறிப்பாக பெண் டாக்டர்கள், நர்ஸ்கள் என யாருமே செல்லவில்லை. 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு முதல் கட்டமாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளை ஆண் டாக்டர், முழு உடல் மருத்துவ பரிசோதனை செய்ததாக கூறப்படுகிறது... அந்த சமயத்தில் டாக்டருடன், வேறு பெண் டாக்டர்களோ, நர்ஸ்களோ இல்லை என்றும் தெரிகிறது.

 மாணவிகள் கண்ணீர்

மாணவிகள் கண்ணீர்

இந்த செக்கப் நடந்த மறுநாளே, அந்த பள்ளியின் மாணவிகள் சிலர், "நாங்க ஸ்கூலுக்கு போக மாட்டோம்" என்று தங்களது வீடுகளில் அழுதுகொண்டே கூறியுள்ளனர்.. இதனால் அதிர்ந்து போன பெற்றோர்கள் அதற்கு காரணமும் கேட்டுள்ளனர்.. அப்போதுதான், ஆண் டாக்டர் ஒருவர், மெடிக்கல் செக்கப் என்ற பெயரில், ஆடைகளை களைந்த விவரம் தெரியவந்தது.. இதனால் கொந்தளித்து போன பெற்றோர்கள், மாணவிகளுடன் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்றனர்.. மாணவிகளை வகுப்பறைகளுக்கு அனுப்ப மறுத்து, அதே பள்ளியை முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தினர்..

போராட்டம்

போராட்டம்

இந்த விஷயம் தெரிந்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து விட்டனர்.. அதேபோல குன்னத்தூர் போலீசாரும் தகவலறிந்து விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்... மாணவிகளை செக்கப் செய்யும்போது பெண் டாக்டரையோ, பெண் நர்ஸ்ஸையோ, குறைந்தபட்சம் பள்ளி ஆசிரியையோ பக்கத்தில் வைத்து கொண்டு இந்த மெடிக்கல் செக்கப்பை ஏன் நடத்தவில்லை என்று போலீசாரிடம் பெற்றோர்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்கள்.. வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கொந்தளிப்பு

கொந்தளிப்பு

சம்பந்தப்பட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதாரதுறை துணை இயக்குனரிடம் பெற்றோர் சார்பில் புகார் மனுவும் தரப்பட்டது.. இந்த மனுவை பெற்றுக்கொண்ட துணை இயக்குனர் உரியநடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்... ஆனாலும் பெற்றோர்கள் சமாதானம் ஆகவில்லை.. டாக்டர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை, குழந்தைகளை பள்ளிக்க அனுப்ப மாட்டோம் உறுதியாக சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தனர்.. இறுதியில், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளதையடுத்து, விசாரணையும் நடக்கிறது.

மறுப்பு

மறுப்பு

எனினும் இதுகுறித்து திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் சொல்லும்போது, "பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர் கூறுவதுபோல தவறான முறையில் பரிசோதனை செய்யப்படவில்லை. அங்கு தவறு நடைபெறுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை... செக்கப் செய்யும் இடத்தில் பெண் நர்ஸ், பள்ளியின் டீச்சர்கள் இருந்துள்ளனர்... ஆனாலும் பெற்றோர்கள் அளித்த புகாரின்படி சம்பந்தப்பட்ட டாக்டர், மருத்துவ குழுவினரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது... இதில் தவறு ஏதேனும் நடந்திருந்தால் தொடர்புடைய மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று நம்பிக்கையாக தெரிவித்துள்ளார்.

English summary
Medical examination of schoolgirls in kunnathur school near Tiruppur district
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X