Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பல்லடம் பதறிடுச்சே.. அதுவும் நைட்டியுடன்.. முருகேஷூக்கு வேற வழியே தெரியல.. மாப்பிள்ளை தேடும் மனைவி

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: பல்லடம் தங்கமணி, ஒரேநாளில் இணையத்தில் பாப்புலர் ஆகியுள்ளார்.. இது சம்பந்தமான வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி உள்ளது. என்ன காரணம்?
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ளது பொங்கலூர் பெருந்தொழுவு என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் முருகேஷ்... இவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக, மனைவியை விட்டு பிரிந்துவிட்டார்.

இதனால் 2வதாக தங்கமணி என்பவரை கல்யாணம் செய்து கொண்டார்.. இந்த நிலையில், தங்கமணிக்கு திடீர்னு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. மனைவிக்கு உடல்நலம் பாதிக்கப்படவும், முருகேஷ் பெருத்த கவலைக்கு ஆளானார்.. அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை மேற்கொண்டார்.. ஆனால், மருத்துவ சிகிச்சைக்கு பணம் எகிறி கொண்டே போனது.. ஒருகட்டத்தில் சிகிச்சைக்கான பணத்தை அவரால் புரட்ட முடியவில்லை.

Tiruppur Palladam incident and why did young woman looking for a new bridegroom

பூரண சுகம்: எனினும், எப்படியும் தன்னுடைய மனைவியை காப்பாற்றிவிட வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்தார்.. இதனால் கடன் வாங்கும் நிலைக்கும் தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கேஇங்கே அலைந்து கடனைவாங்கி, ஒருவழியாக மனைவியையும் காப்பாற்றிவிட்டார்.. தங்கமணியும் பூரண குணமாகி வீட்டுக்கு ஜம்மென்று வந்து சேர்ந்துவிட்டார்.

இப்போது, முருகேஷூக்கு அடுத்த பிரச்சனையாக கடன் தொல்லை வெடித்தது.. கடன் கொடுத்தவர்கள் எல்லாம், பணத்தை கேட்டு நெருக்க ஆரம்பித்தனர்.. இதனால், விழிபிதுங்கிய முருகேஷ், கடனை அடைக்க தன்னுடைய வீட்டை விற்க முடிவு செய்தார்..

இந்த விஷயம் அறிந்த முருகேஷின் தங்கை, அந்த வீட்டை தானே வாங்கி கொள்வதாக முன்வந்தார்.. உரிய விலையை தந்து முருகேஷின் வீட்டையும் வாங்கி கொண்டார்..

ஓட்டாண்டி: இப்போது, முருகேஷூக்கு அடுத்த பிரச்சனையாக தங்கமணியே உருமாறி நின்றார்.. சொத்துக்கள் எல்லாம் விற்றுவிட்டு, கணவன் ஓட்டாண்டியாக நிற்பதை பார்த்து ஆத்திரம் அடைந்தார்.. அதுவும், தன்னுடைய நாத்தனார் அந்த வீட்டை வாங்கிவிட்டார் என்றதுமே, ஆவேசம் டபுள் மடங்கானது. இதனால் கணவனை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. அத்துடன், தன்னுடைய சொந்தக்காரர்கள் எல்லாரையும் வைத்துக்கொண்டு, முருகேஷே வீட்டை விட்டே அடித்து விரட்டி துரத்தியிருக்கிறார்.

இதனால் அதிர்ந்து போன முருகேஷ், இனி எங்கு போவது என்று தெரியாமல் விழித்துள்ளார். இதனால், தான் வேலைபார்க்கும் இடத்திலேயே முருகேஷ் தங்க வேண்டிய நிலைமை வந்துவிட்டது..

Tiruppur Palladam incident and why did young woman looking for a new bridegroom

நாத்தனார்: இப்போது முருகேஷூக்கு அடுத்த பிரச்சனை கிளம்பியது.. எந்த வீட்டை நாத்தனார் வாங்கினாரோ, அந்த வீட்டுக்கு, போலீசார் உதவியுடன் தங்கமணி அத்துமீறி நுழைந்து வசிக்க ஆரம்பித்துவிட்டார். இதனால் பணம் கொடுத்து வீட்டை வாங்கிய நாத்தனார், என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்துள்ளார். இப்போதும் அந்த வீட்டை தங்கமணி, ஆக்கிரமித்து வைத்திருக்கிறாராம்..

இப்போது முருகேஷூக்கு இன்னொரு இடி தலையில் வந்து விழுந்தது.. சொத்து, பணம் எதுவும் இல்லாமல் முருகேஷ் இருப்பதால், அவரை கழட்டிவிட்டு, இன்னொரு கல்யாணத்துக்கு ரெடியாகிவிட்டாராம் தங்கமணி.. அதைவிட முக்கியமாக, மேட்ரிமோனியில் மாப்பிள்ளையும் பார்க்க ஆரம்பித்துவிட்டாராம்.. அந்த மேட்ரிமோனியில், தனக்கு கல்யாணமான விஷயத்தையே மொத்தமாக மறைத்துள்ளார்.. மேலும் விவாகரத்து ஆனதாகவும் அதில் பதிவிட்டுள்ளாராம்.

தங்கமணி: இது தொடர்பாக முருகேஷ் குடும்பத்தினர் புகார் தந்துள்ளனர்.. போலீசாரும் புகார் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்... இதனிடையே, வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில், தங்கமணி நைட்டியுடன் சென்று, நாத்தனார் தரப்புடன் வாக்குவாதம் செய்வது பதிவாகி உள்ளது.. இந்த சண்டையை அந்த தெருவில் இருப்பவர்கள் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருககிறார்கள்.

உடம்பு சரியில்லாத மனைவியை படாதபாடு காப்பாற்றிவிட்டால், இப்படி அடுத்த மாப்பிள்ளைக்கு ரெடியாகிவிட்டாரே என்று நொந்து போய் உள்ளாராம் முருகேஷ்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+