வேலைக்கு வந்தால் வாரம் 2 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. திருப்பூரில் அசத்திய பனியன் நிறுவன ஓனர்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர் : திருப்பூரை சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளர் ஒருவர் ஓவர்லாக், பேட்லாக் தையல் இயந்திர டைலர்கள் ஒரு வாரம் வேலை செய்தால் இரண்டு லிட்டர் பெட்ரோல் இலவசம் என விளம்பரம் செய்துள்ளார். இந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் திருப்பூரில் ஒருவாரம் முழுமையாக வேலைக்கு வந்தால் 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் என்ற விளம்பரம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tirupur : 2 liters of petrol per week for free if you come to work

தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. திருப்பூரில் பெட்ரோல் விலை 102 ரூபாய்க்கும் மேல் உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

அதே நேரத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றனர். மீண்டும் தொழிலாளர்கள் திரும்பி வந்தாலும் தொழிலாளர்கள் தேவையும் அதிகரித்து உள்ளது.

இதனால் திருப்பூரை சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளர் ஒருவர் ஓவர்லாக், பேட்லாக் தையல் இயந்திர டைலர்கள் ஒரு வாரம் வேலை செய்தால் இரண்டு லிட்டர் பெட்ரோல் இலவசம் என எழுதி தனது தொலைபேசி எண்ணையும் இணைத்து விளம்பரமாக மின் கம்பங்களில் கட்டி வைத்துள்ளார். இந்த விளம்பர பலகை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+