ஓபிஎஸ் பேசும்போது.. ‘கத்தி’ உடன் மேடையை நெருங்கிய நபர்.. மடக்கிப் பிடித்த ஆதரவாளர்கள்.. என்னாச்சு?
திருச்சி : திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் கத்தியுடன் ஒருவர் மேடைக்கு அருகே முண்டியடித்துக்கொண்டு சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவரைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில், விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டி கிட்டத்தட்ட கடந்த ஓராண்டாக தொடர்ந்து வருகிறது. இதில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்து தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் உத்தரவிட்டது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கட்சி, சின்னம், கொடி ஆகியவற்றை ஓபிஎஸ் அணியினர் பயன்படுத்தக்கூடாது என எச்சரித்தனர்.

இதற்கிடையே, நீதிமன்றத்தில் தொடர் பின்னடைவைச் சந்தித்த ஓபிஎஸ், மக்கள் மன்றத்தில் தனது செல்வாக்கை நிரூபிக்க முடிவு செய்தார். திருச்சியில் முப்பெரும் விழா மாநாடு நடைபெறும் என அறிவித்தார். திருச்சி பொன்மலை ஜி-கார்னர் மைதானத்தில் அவரது ஆதரவாளர்கள் 25 ஆயிரம் பேர் பங்கேற்க, ஓபிஎஸ் அணியின் முப்பெரும் விழா மாநாடு நேற்று நடைபெற்றது.
ஓபிஎஸ் நடத்திய மாநாடு : கட்சி பெயர், சின்னம் மற்றும் கொடியை பயன்படுத்த எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்த போதும், மாநாட்டில் அதிமுக கொடிகள் கட்டப்பட்டிருந்தன. அதிமுக தலைமைக் கழகம் போன்றே மேடை வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த மாநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு செங்கோல் வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பேசிய பின்னர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
ஓ.பன்னீர்செல்வம் பேசிக் கொண்டிருந்தபோது, பார்வையாளர்கள் பகுதியிலிருந்த தொண்டர்கள் அவரை நோக்கி முண்டியடித்துக் கொண்டு மேடைக்கு அருகே சென்றனர். அப்போது அவர்களில் ஒருவரிடம் கத்தி இருந்தது. இதை கவனித்து அதிர்ச்சியடைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அந்த நபரைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கத்தியுடன் வந்த நபர் : உடனடியாக அவரை பொன்மலை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று காவல்துறையினர் விசாரித்தனர். அதில் அவர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகேயுள்ள சீனிவாசபேரியைச் சேர்ந்த கருத்தபாண்டி (57) என்பதும், இவர் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
மேலும் தான் ஓபிஎஸ்ஸின் தீவிர தொண்டர் எனவும், ஓபிஎஸ் அணியில் விவசாய பிரிவு தலைவர் பொறுப்பில் இருப்பதாகவும், தனது தற்காப்புக்காகவே கத்தியை வைத்திருந்ததாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இவ்வளவு பெரிய விஷயமா! அதிமுக கூடாரத்தை விஜய் காலி செய்வதற்குப் பின்னால் இருக்கும் மாஸ்டர் பிளான்! -
அடுத்து ராஜினாமாவுக்கு ரெடியாகும் 3 தலைகள்.. ’மறுமலர்ச்சி’யுடன் விஜய்! பனையூர் போட்ட பக்கா ஸ்கெட்ச்! -
சென்னையில் இடி.. தவெகவில் இணையும் அதிமுக மா.செக்கள்? எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
47ல் இருந்து 42ஆக வீழ்ச்சி! எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள்! -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
வயிறு எரியுது! விஜய்யிடம் சரணடைவதை விட உயிரை விடலாம்! விஜயபாஸ்கர் மீது ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு! -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்! -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்?












Click it and Unblock the Notifications