அமைச்சர் கே.என். நேருவின் சொத்தை கணக்கு செய்தால்! பில்கேட்ஸ்லாம் ஜுஜுபிதான்! அண்ணாமலை கலகல
திருச்சி: அமைச்சர் கே.என்.நேருவின் சொத்து மதிப்பை கணக்கிட்டால் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 3ஆவது இடத்திற்கு போய்விடுவார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து திருச்சியில் என் மண் என் மக்கள் எனும் பாதயாத்திரை நிகழ்ச்சியில் அண்ணாமலை கூறியிருப்பதாவது: எம்எல்ஏவின் முக்கியமான வேலை என்னவென்றால் கரூரில் குவாரி நடத்திக் கொண்டிருக்கிறார். ஸ்ரீரங்கத்தின் மக்கள் பிரச்சினைகளை சரி செய்ய எம்எல்ஏ பழனியாண்டி இங்கு இல்லை. அண்மையில் கரூர் மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்ட சில குவாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதில் அதிகபடியான அபராதம் யாருக்கு என்றால் எம்எல்ஏ பழனியாண்டிக்குத்தான்.
ரூ 23.54 கோடி அபராதம் இந்த குவாரிக்கு விதிக்கப்பட்டது. அரசு நிர்ணயிக்கப்பட்ட அளவை தாண்டி இரவு பகலாக 5,36,250 கன மீட்டர் அளவுக்கு கற்களை வெட்டி எடுத்திருக்கிறார்கள். பாருங்கள் இதுதான் எம்எல்ஏ சாதனை. இந்த சாதனையை சொல்லி அடுத்த முறை ஓட்டு கேட்பாரா?
எம்எல்ஏ பழனியாண்டி பேசிய ஒரு ஆடியோ லீக்காகி இருக்கிறது. அதில் என்னண்ணே உங்களோட குவாரியையே ரெய்டு செய்துவிட்டார்கள் என்று கேட்டால் அதற்கு எம்எல்ஏ சொல்கிறார், தன்னை விட பணக்காரர்கள் யாரும் இருக்கக் கூடாது என அமைச்சர் நேரு என்னை அழிக்க பார்க்கிறார். உண்மையில் அமைச்சர் நேருவினுடைய சொத்தை உண்மையாக கணக்கிட்டால் பில்கேட்ஸ் ஸ்கண்டிப்பாக 3ஆவது இடத்திற்கு போய்விடுவார்.
இரண்டாவது இடத்தில் நிச்சயமாக கே.என். நேருதான் இருப்பார். அண்ணனோட தொகுதிக்கு போகும் போது கச்சேரிக்கு இருக்கிறது நான் அன்று பேசுகிறேன். சொத்துகளை கணக்கு செய்தால் பில் கேட்ஸ் நிச்சயம் மூன்றாவது இடத்திற்கு போய்விடுவார். 2ஆவது இடத்தில் அண்ணன் கே என் நேரு இருப்பார். அண்ணனுடைய தொகுதியில் நின்றுக் கொண்டு தான் பேசுகிறேன்.
திருச்சியை தன்னுடைய சொந்த கோட்டையாக மாற்றி எந்த ஒரு தனித்திறமையும் இல்லாமல் கரை வேட்டி கட்டியது மட்டுமே ஒரு திறமையாக வைத்துக் கொண்டு காலம் காலமாக மக்களுடைய வரிப்பணத்தை கொள்ளையடித்து இன்றைய ஆட்சியாளர்கள் மிகப் பெரிய கொள்ளைக்காரர்களாக மாறியிருப்பதுதான் திமுக அமைச்சர்கள் செய்யக் கூடிய ஒவ்வொரு சாதனை.
புதுக்கோட்டையில் நான் பேசும் போது சொன்னேன், அமைச்சர் ரகுபதி மீது ஊழல் வழக்கு இருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில் அவர் எபபடி ஊழல் தடுப்புத் துறை அமைச்சராக இருப்பார். நியாயப்படி அவர் சிறையில்தானே இருக்க வேண்டும், அவர் எப்படி சிறைத் துறை அமைச்சராக இருப்பார் என கேட்டிருந்தேன். அதற்கு அவர் பதில் சொல்லியுள்ளார்.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்துவிட்டால் தமிழகத்தில் முதல் கைது நான்தானாம். சட்டத் துறை அமைச்சராக இருக்கீங்க, ஒரு லட்சம் போலீஸை வைத்துள்ளீர்கள். இப்போது கைது செய்யலாமே! எதுக்கு 2024 வரை எதுக்கு காத்திருக்கணும். 2024 இல் ஆட்சிக்கு வந்துவிடலாம் என இந்தியா கூட்டணி பகல் கனவு காண்கிறது.
இந்தியா கூட்டணியில் உள்ள அகிலேஷ் யாதவ் மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் சொல்கிறார், காங்கிரஸ் மாதிரியான பிராடு கட்சிக்கு யாரும் தப்பித் தவறி கூட ஓட்டு போட்டுவிடாதீர்கள்.
என்று! எனவே ரகுபதி அவர்களே தைரியம், தில்லு இருந்தால் இப்போதே கைது செய்ங்க. நான் காத்துக் கொண்டிருக்கிறேன்.

பாஜக உங்கள் குற்றங்களை மக்கள் முன்பு வைக்கிறோம். நீங்கள் செய்யும் தவறுகளை மக்களிடம் எடுத்துச் சொல்கிறோம். நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதையும் தைரியமாக சொல்கிறோம். என்னை விலைக்கு வாங்க பார்த்தீர்கள். அது முடியலை, என்னை மிரட்டியும் பார்த்தீர்கள். இதற்கெல்லாம் பயப்படக் கூடியவர்கள் பாஜகவில் தலைவராகவோ தொண்டனாகவோ இருக்க மாட்டார்கள். ரகுபதி செய்வது போன்ற மோசமான அரசியலை இந்திய மண்ணில் யாருமே பார்த்திருக்க மாட்டோம். இவ்வாறு அண்ணாமலை கடுமையாக விமர்சித்திருந்தார்.
-
26 வயது கொத்தனாருக்கு திருச்சியில் விழுந்த மரண அடி! காமுகர்களுக்கு நீதிபதி ஜெயந்தி தந்த சரியான பாடம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications