காவிரி கரையில் இதென்ன உருவம்.. திருச்சி, தஞ்சாவூர் ஆற்றில் பார்க்கவே நீளமாக இருக்கே.. கொள்ளிடம் பரபர
திருச்சி: தமிழகத்தில் ஆங்காங்கே கனமழையால், நீர்ப்பெருக்கு அதிகரித்து வரும்நிலையில், உயிரினங்களின் நடமாட்டமும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்பட துவங்கியிருக்கின்றன. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அத்துடன், அந்தந்த மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் வேண்டுகோள்களையும் விடுத்து வருகிறார்கள்.
மழைநீர் பெருக்கு அதிகரித்து காணப்படும்போதும்சரி, வெள்ள நீர் வடிந்து செல்லும்போதும்சரி, முதலைகளின் நடமாட்டத்தை காணலாம்.. கடந்த வருட இறுதியில் சென்னையின் மிக்ஜாம் புயல் பாதித்து, புறநகரை வெள்ள நீர் சூழ்ந்து விட்டது. இந்த வெள்ள நீர் வழிந்தோடியபோது, முதலைகளின் நடமாட்டத்தை காண முடிந்தது.

புறநகர் பகுதி: சென்னையின் புறநகர் பகுதிகளில் ஏரிகள் உள்ளதால், அங்கிருந்து இந்த முதலைகள் வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்துவிட்டதாக காரணம் சொல்லப்பட்டது. சென்னையில் இது அரிது என்றாலும், காவிரி ஆற்றுப்படுகைகளில் முதலைகளின் நடமாட்டம் அடிக்கடி தென்படுவதாக செய்திகள் வெளியாகின்றன. இப்போதுகூட ஒரு வீடியோ வெளியாகி கொண்டிருக்கிறது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, திருச்சி மக்களுக்கு பீதியே கிளம்பிவிட்டது. மாநகர், சிந்தாமணி காவிரிப் பாலம் பகுதியில் ஆற்றுக்குள் உள்ள மணல் திட்டுகளில் 2 முதலைகள், அந்த பகுதி மக்கள் பார்த்திருக்கிறார்கள்.. உடனே சற்று நேரத்தில், ஏராளமான மக்கள், ஆற்றுப்பகுதிக்கு திரண்டுவந்துவிட்டனர். இதனால் போக்குவரத்து நெரிசலே ஏற்பட்டுவிட்டது.
ட்ரோன் கேமிரா: பிறகு , போலீசார் தீயணைப்பு துறையினருடன் விரைந்து வந்து, முதலைகள் நடமாட்டத்தை ட்ரோன் கேமிராக்களின் மூலம் கண்காணித்து, அவற்றை பிடித்து வேறு இடங்களில் கொண்டு சென்று விடுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டனா்.. அப்போது மணல் திட்டில் இருந்த முதலைகளில் ஒன்று நீருக்குள் இறங்கிச்சென்றது... இன்னொருன்று அதே பகுதியில் நீரில் செல்வதும் திட்டில் ஏறுவதுமாக இருந்தது... இந்த வீடியோவும் அப்போது வெளியாகி பரபரப்பை தந்திருந்தது.
திருச்சி பகுதியை தொடர்ந்து, அடுத்த சில தினங்களிலேயே, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஆழத்தில் இருக்கும் முதலைகள் மேலே தென்பட்டு, அடுத்த பரபரப்பை தந்துவிட்டன.
தஞ்சாவூர்: இப்போது, தஞ்சை கொள்ளிடம் ஆற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.. வாழ்க்கை கிராமத்தில் அமைந்துள்ள இந்த ஆற்றில், கடந்த சில நாட்களாக முதலை நடமாட்டம் இருப்பதாகவும், கால்நடைகளை முதலை வேட்டையாடி வருவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
முதலையால் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், வனத்துறை அதிகாரிகள் முதலையை பிடிக்கும் உடனடியாக நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என்றும் கோரிக்கைகளை விடுத்து வருகிறார்கள்.
முதலைகள்: 2 நாட்களுக்கு முன்பு, பாபநாசம் கொள்ளிடம் ஆற்றில், முதலை வேட்டையாடியதில், பசுமாடு மற்றும் 2 ஆடுகள் உயிரிழந்துவிட்டதாக கிராமமக்கள் கூறுகிறார்கள்.. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக முதலையை பிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாபநாசம் கொள்ளிடம் ஆறானது அரியலூர் மாவட்டம் தூத்தூர், தஞ்சை மாவட்டம் வாழ்க்கை கிராமங்களை இணைக்கும் பகுதியாக அமைந்துள்ளது... இந்த கொள்ளிடம் ஆற்றில்தான், பொதுமக்கள், பெண்கள், சிறுவர்கள் குளித்து வருகிறார்கள்.. ஆடு மாடுகளை குளிப்பாட்டுவதற்கும், துணிகளை துவைப்பதற்கும், இங்கிருந்து தூத்தூர் பகுதி செல்வதற்கும் இந்த ஆற்றை பயன்படுத்தி வருகின்றனர்...
உயிரிழப்பு: ஆனால், முதலைகளால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால், சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் கொள்ளிடம் ஆற்றுக்கு விரைந்து வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாழ்க்கை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீமுஷ்ணம்: சில நாட்களுக்கு முன்புகூட, கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே, குளத்தில் மீன்பிடிக்க வீசிய வலையில், சுமார் 100 கிலோ எடையுள்ள முதலை சிக்கி பரபரப்பை தந்துவிட்டது. கோதண்டவிளாகம் கிராமத்தில் உள்ள குளத்தில், மீன் பிடிக்க சிலர் வலை வீசியபோதுதான், இப்படி 100 கிலோ எடையுள்ள முதலை சிக்கியிருக்கிறது.
முதலையை பார்த்ததுமே அலறி தெறித்து ஓடிய மக்கள், நீண்டநேரமாக அசைவின்றி கிடந்ததால் சந்தேகம் வந்துள்ளது. அதற்குபிறகுதான், அதுஉயிரிற்ற நிலையில் இருப்பதை அறிந்தனர். குளத்திலேயே அந்த இறந்திருக்கலாம் என்றும் கருதப்பட்டது. இந்த குளத்தை சுற்றி ஏராளமான குடியிருப்புகள் இருப்பதுடன், சிறுவர்கள், பொதுமக்கள் நடமாட்டம் உள்ளதால், குளத்தில் வேறு முதலைகள் இருந்தால், அதனை பிடிக்கவும் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications