ஆபத்து.. திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் கோபுரத்தில் விரிசல்.. அச்சத்தில் பக்தர்கள்
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கிழக்குவாசல் நுழைவு வாயில் கோபுரத்தின் 2 நிலைகளில் மேற்கூரை பூச்சு இடிந்து விழும் நிலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள கோவில் கோபுரத்தை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மொத்தம் 21 கோபுரங்கள் உள்ளன. இதில் தற்போது நாம் தரிசனம் செய்யும் ராஜகோபுரம் 236 அடி உயரம் கொண்டது. தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. 21 கோபுரங்களில் மற்றவை வண்ணமயமாய் காட்சி அளிக்க, ஒன்று மட்டும் வெள்ளை நிறத்தில் இருக்கும்.

வைணவர்களின் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். உங்களவில் இரண்டாவது பெரிய விஷ்ணு கோவில். நவகிரகங்களில் சுக்கிரன் பரிகார தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது. ஆழ்வார்கள் அனைவராலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட இக்கோவிலில் தான் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்து கோதை என்றழைக்கப்பட்ட அழ்வார்களில் ஒரே பெண்ணான ஆண்டாள் அரங்கனுள் ஐக்கியமான சிறப்புடையது.
அரங்கம் என்றால் தீவு என தமிழில் ஒரு பொருள் உண்டு. ஸ்ரீரங்கத்தில் ஓடும் காவிரி ஆற்றுக்கு நடுவே இருக்கும் தீவு ஆகிய அரங்கத்தில் இறைவன் கோவில் கொண்டுள்ளதால் திருவரங்கம் என இத்தலம் அழைக்கப்படுகிறது. இக்கோவிலின் இறைவனாகிய பெருமாள் ரங்கநாயகர் எனவும் தாயார் ரங்கநாயகி எனவும் அழைக்கப்படுகிறார்கள்.
5000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான கோவிலான இந்த கோவில் பல்வேறு சிறப்புகளை கொண்டது. சோழர்கள், பாண்டியர்கள், ஹொய்சளர்கள், விஜயநகர பேரரசர்கள் என பல அரச வம்சம்களால் இக்கோவில் சீர்செய்யபட்டு கட்டப்பட்டுள்ளது. 14 ஆம் நூற்றாண்டில் டெல்லி சுல்தான்களால் இந்த ரங்கநாதர் கோவில் சூறையாடப்பட்டது.
இந்த கோவிலில் வைணவ சம்பிரதாயத்தை உயிர்ப்பிக்க வந்தவரும் ஆதிசேடனின் அவதாரமாக கருதப்படுபவருமான ஸ்ரீ ராமானுஜர் தமிழை முதன்மையாக கொண்டு கோவில் சம்பிரதாயங்களை கடைபிடிக்குமாறு செய்து நிர்வாகத்தை சீர் செய்தார். இந்த கோவிலில் ஸ்ரீ ராமானுஜரது திருவுடல் 900 ஆண்டுகளுக்கும் மேலாக பச்சை கற்பூரம் சாற்றி பாதுகாக்கப்படுகிறது. இங்கிருக்கும் சக்ரத்தாழ்வார் சந்நிதியில் வழிபட்டால் நம்மை அண்டி இருக்கும் துஷ்ட சக்திகள், துரதிர்ஷ்டங்கள் மற்றும் நோய் நொடிகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் செல்வது போல ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த நிலையில், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கிழக்குவாசல் நுழைவு வாயில் கோபுரத்தின் 2 நிலைகளில் மேற்கூரை பூச்சு இடிந்து விழும் நிலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அபாயகரமான நிலையில் உள்ள கோபுரம் வழியாக பக்தர்கள் பயணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் கோவிலின் கோபுரங்கள், மதில் சுவர்களை முறையாக ஆய்வு செய்து பராமரிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications