ராமஜெயம் ஒரு அடாவடி! நேரு அமைச்சராக இருக்க என்ன காரணம்? பட்டாசாய் வெடித்த சூர்யா சிவா! பறந்த புகார்!
திருச்சி : திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவாவின் மகனான சூர்யா சிவா பாஜகவில் சேர்ந்த நிலையில் தற்போது அமைச்சர் கே என் நேரு குறித்தும் அவரது சகோதரர் ராமஜெயம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர் மீது திருச்சி ஐஜி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய தமிழகத்தின் திமுக பிரமுகர்கள் மிகவும் குறிப்பிடத்தகுந்த ஒரு முக்கிய நிர்வாகி என்றால் திருச்சி சிவா என்று கண்ணை மூடிக்கொண்டு உடன்பிறப்புகள் சொல்லுவார்கள்.
திமுக தலைவராக கருணாநிதி இருந்த போதும் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைவராக இருக்கும் போதும் கட்சியில் திருச்சி சிவாவுக்கு கொடுக்கப்படும் அங்கீகாரம் ஒருபோதும் குறைந்தபாடில்லை. தொடர்ந்து பலமுறை மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் திருச்சி சிவா நாடாளுமன்றத்தில் திமுகவின் முக்கிய முகங்களில் ஒருவராக இருக்கிறார்.

சூர்யா சிவா
இந்த நிலையில் திருச்சி சிவா உடன் கருத்து மோதல் காரணமாக நீண்ட நாட்கள் அவருடன் பேசாமல் இருக்கும் அவரது மகன் சூர்யா சிவா பாஜகவில் இணைந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து அவர் பாஜகவில் இணைந்த நிலையில் அவருக்கு பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு ஊடகங்களிலும் யூட்யூப் சேனல்களிலும் திமுகவுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகிறார்.

சர்ச்சைப் பேட்டி
இந்நிலையில் வழக்கு ஒன்றில் சிக்கி வெளியே வந்த அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல யூட்யூப் சேனல் ஒன்றில் பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சரை விமர்சனம் செய்து பேசியதோடு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சரின் மறைந்த தம்பி ராமஜெயம் குறித்தும் பல விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

ராமஜெயம்
ராமஜெயம் கொலை செய்யப்பட்ட வழக்கு தற்போது விசாரணையில் இருந்தாலும் குற்றவாளிகளை ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது. கொலை செய்தவரை கண்டுபிடித்து தண்டனை வாங்கி தரும் அளவிற்கு ராமஜெயம் தியாகி அல்ல என்றும், மேலும் மறைந்த ராமஜெயம் அடாவடியானவர் என்றும் அவர்களுடைய வளர்ச்சியில் தான் தற்போது அமைச்சர் கே.என்.நேரு வாழ்ந்து வருகிறார் என்றும் பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

திமுக புகார்
இந்நிலையில் சூர்யா சிவாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்சி மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண் மத்திய மண்டல காவல்துறை தலைவரிடம் கார் மனு அளித்துள்ளார். அதில் ஏற்கனவே தன்னிடம் பணியாற்றிய கார் ஓட்டுனருக்கு முறையான சம்பளம் வழங்காமல் அதை கேட்க சென்றவரை கொலை முயற்சி செய்ததாக வழக்கு அவர் மீது பதிவு செய்யப்பட்டு இருந்தும் தற்போது மீண்டும் இப்படி சர்ச்சைக்குரிய பேச்சை வெளியிட்டு இருக்கிறார். எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications