திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரசாத ஸ்டால் எரிந்து நாசம்.. ரூ 4 லட்சம் பொருள்கள் சாம்பல்

Google Oneindia Tamil News

திருச்சி: ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வளாகத்தில் செயல்பட்டு வரும் பிரசாதக் கடையில் (தனியாரால் நடத்தப்படுவது) திங்கள்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

Recommended Video

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரசாத ஸ்டால் எரிந்து நாசம்.. ரூ 4 லட்சம் பொருள்கள் சாம்பல்

    திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறும். இதில் வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறப்பு பெற்றது. பகல் பத்து, இராப் பத்து உற்சவங்களில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வருவார்கள்.

     Fire broke out at Prasadam stall in Srirangam Ranganathar temple

    தினமும் சிறப்பு பூஜைகள் நடை பெறுவதால், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்க கருடாழ்வார் சன்னதி அருகே பிரசாத ஸ்டால் ஒன்று உள்ளது. இங்கு புளியோதரை, தயிர் சாதம், பொங்கல், வடை, முறுக்கு, அதிரசம், லட்டு போன்ற பிரசாதங்கள் விற்கப்படும்.

    இரவு 9 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும் போது பிரசாத ஸ்டால்களும் அடைக்கப்படும். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு பிரசாத ஸ்டால் மூடப்பட்டது. நேற்று அதிகாலை 5 மணியளவில் நடைபெற்ற விஸ்வரூப தரிசனத்துக்காக நேற்று அதிகாலை 4 மணியளவில் பட்டர்கள், ஊழியர்கள் கோயில் நடையை திறந்தனர். அப்போது கருடாழ்வார் சன்னதி அருகே பிரசாத ஸ்டால் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

    இதில் மண்டபம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்ததை பார்த்த பட்டர்கள், ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தண்ணீர் எடுத்து வந்து ஊற்றி தீயை போராடி அணைத்தனர். அதற்குள் ஸ்டாலில் இருந்த பிரசாதங்கள் சாம்பலானது.

     Fire broke out at Prasadam stall in Srirangam Ranganathar temple

    மின்சார விளக்குகள், வயர்கள் கருகின. மண்டபம் முழுவதும் கரும்புகையாக இருந்ததால் கோயில் துப்புரவுப் பணியாளர்கள் கழுவி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். தீவிபத்தால் அப்பகுதியில் மின்சாரம் தடை செய்யப்பட்டது.

    கோயில் ஊழியர்கள் உடனடியாக தீயை அணைத்ததால் பிரசாத ஸ்டாலின் அருகே இருந்த கோயில் இ-உண்டியல், ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் நோட்டுகள் தப்பியது. ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தினர். கோயிலில் நடைசாத்தும்போது சாம்பிராணி காட்டுவது வழக்கம்.

    நேற்று முன்தினம் இரவு சாம்பிராணி காட்டிய போது தூபகாலிலிருந்து பரவி தீ பிடித்ததா அல்லது மின்கசிவால் தீ பிடித்ததா என போலீசார் விசாரித்து வருகின்றனர். கோயிலில் தீ விபத்தால் விஸ்வரூப தரிசனத்திற்காக வந்த பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

    கோயிலில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து, ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தினா் விசாரணை நடத்தி வருகின்றனா். தீ விபத்தில் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

    English summary
    Fire broke out at Prasadam stal in Srirangam Ranganathar temple. Devotees Who came for Viswaroopa Dharshan panic.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X