பழையபடி.. 15 மாசம் ஜெயில்ல வைங்க.. இந்தி கற்றுக்கொள்கிறேன்.. ஆ.ராசா கலாய்
திருச்சி: சிறையில் 15 மாதம் இருந்தபோது இந்தி கற்றுக்கொண்டேன். வெளியே வந்தவுடன் கற்றுக்கொள்ளவில்லை. இப்போது மறந்துவிட்டது என இந்தி எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் திமுக எம்பி ஆ ராசா பரபரப்பாக பேசினார்.
மத்திய அரசு இந்தி மொழிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை இணைப்பு மொழியாக்க வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
சமீபத்தில் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு சில பரிந்துரைகளை வழங்கியது. அதில் மத்திய பல்கலைக்கழகங்கள் உள்பட அனைத்து தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக இந்தி இருக்க வேண்டும் என பரிந்துரைத்தது.

ஆர்ப்பாட்டம்
இதற்கு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்பட உள்பட இந்தி மொழி பேசாத மாநிலங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பு திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னை உள்பட பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது மத்திய அரசுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தி மொழி திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆ ராசா பேச்சு
இந்நிலையில் தான் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இந்தி எதிர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்று இந்தி திணிப்புக்கு எதிராக பேசி வருகின்றனர். இந்நிலையில் திருச்சியிலும் திமுக சார்பில் இந்தி எதிர்ப்பு பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் திமுகவின் துணை பொதுச்செயலாளரும், எம்பியுமான ஆ ராசா பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

எனக்கு என்ன பிரச்சனை
இந்தி மூலம் இந்துத்துவாவை கொண்டு வருகிறார்கள். ஜாதி, மதம் ஆகியவை மக்களை பிரிக்கும். மொழி மட்டும் தான் மக்களை சேர்க்கும். இனத்தால் பிரிந்த அனைவரையும் தமிழ் தான் ஒற்றைக்குடைக்கும் கொண்டு வருகிறது. திமுக தொடர்ந்து இந்தி திணிப்பை எதிர்த்து வருகிறது. அண்ணா, கருணாநிதி வழியில் ஸ்டாலினும் தொடர்கிறார். இந்தியை படிக்கிறது என்றால் படிக்கலாம். இதில் எனக்கு என்ன பிரச்சனை இருக்கிறது. தேவைப்பட்டால் இந்தியை படித்து கொள்ள வேண்டியதுதான்.

சிறையில் இந்தி கற்றுக்கொண்டேன்
நான் 15 மாதம் சிறையில் இருந்தேன். அங்கு நான் இந்தி பேச துவங்கி விட்டேன். தண்ணீர் கொண்டு வா என்பதை இந்தியில் கூறுவேன். சிறையில் நான் இந்தியை கற்று கொண்டேன். தற்போது கற்றுக்கொள்ளவில்லை. இந்தி மறந்துவிட்டது. வேண்டுமென்றால் மீண்டும் 15 மாதங்களில் சிறையில் வைத்தால் கற்று கொள்ள போகிறேன். கருப்பு, சிவப்பு நிறத்தை பார்த்து பயப்படுகிறார்கள். 2024ல் கருப்பு சிவப்பா, காவியா என பார்த்து கொள்ளலாமா?'' என்றார்.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications