சூப்பர் செய்தி.. ஆன்லைனில் மருத்துவர்கள்.. ஆலோசனை பெற புதிய ஆப் அறிமுகம்!
திருச்சி: ஆன்லைன் மூலம் மருத்துவர்களைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறும் வகையில் புதிய செயலி திருச்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் ஆன்லைன் மூலம் மருத்துவர்களைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறும் வகையில் புதிய செயலியை முனைவர் எம்.ஏ.எம்.நிஜாம் என்பவர் தயாரித்துள்ளார். நிஸ்கேர் என்ற பெயர் கொண்ட இந்த செயலியில் 24 மணிநேரமும் வீடியோ, ஆடியோ, டெக்ஸ்ட் மெசேஜ் மூலமாக மருத்துவர்களைத் தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செயலி குறித்து எம்.ஏ.எம். பொறியியல் கல்லூரி செயலாளர் மற்றும் நிஸ்கேர் நிறுவனர் முனைவர் எம்.ஏ.எம்.நிஜாம் செய்தியாளரிடம் கூறுகையில்: நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு உள்ள இக்கட்டான சூழ்நிலையில் பெரிய அளவில் மருத்துவ சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். மருத்துவ ஆலோசனை நமக்கு மிகவும் அவசியமாகிறது. இதற்கு ஒரே தீா்வு இணையத்தில் ஆலோசனை பெறுவது மட்டுமே. இதற்காக 'நிஸ்கேரின் மை டாக்டா்' என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளோம்.

இதன்மூலம் நோயாளிகள் வீட்டில் இருந்தும், தனித்து இருந்தும் எளிதாக எந்த நேரத்திலும் மருத்துவா்களிடம் சமூக இடைவெளியோடு ஆலோசனை பெற முடியும்.நோயாளிகள் பல வகைகளாக இருக்கிறார்கள். கரோனா ஊரடங்கால் அவர்கள் மருத்துவமனைக்கு செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. மருத்துவமனைகளில் அவசர தேவைகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதனால் சாதாரண சிகிச்சைக்கு வர வேண்டாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த செயலியில் மருத்துவா், நோயாளிகளுக்கு என தனித்தனியாக உள்ளதால் ஒரே நாளில் தலை சிறந்த மருத்துவா்களிடம் ஆலோசனை பெறலாம். மேலும் மருத்துவா்களின் ஆலோசனைகளை வீட்டிலிருந்தபடியே எந்த நேரமும் விடியோ, ஆடியோக்களாக பெற்று அவற்றை சேமித்து வைத்துக் கொள்ளும் வசதி உள்ளது.
அறுவைச் சிகிச்சை பெற்றவா்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட போன்ற பல தரப்பட்ட நோயாளிகள் தங்களுக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டால் இணைய மூலம் பணம் செலுத்திய பிறகு, எங்களிடம் பதிவு செய்திருக்கும் 5 கி.மீ. சுற்றளவுக்கு உள்ள மருத்துவமனையில் இருந்து மருத்துவா், செவிலியா் அனுப்பி வைக்கப்படுவாா்கள் . இதே போல முன்பதிவு முறையில் மருத்துவா்களின் ஆலோசனைகள் விரைந்து பெற வழி உள்ளது

இந்த செயலியில் அனைத்து சிறப்பு நிபுணர்களும் அடங்கிய பட்டியல் இடம் பெற்றிருக்கும். அதில் தேவையான மருத்துவரை தேர்வு செய்துகொள்ளலாம். மருத்துவரின் கல்வித்தகுதி, அனுபவம் ஆகியவை அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.மேலும் இந்த செயலி மூலமாக சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் முன்கூட்டியே அப்பாயின்மென்ட் பெறமுடியும். அப்பாயின்மென்ட் பெறும் போதே மருத்துவருக்குரிய கட்டணத்தையும் செலுத்தி விடலாம். அப்பாயின்மென்ட் நேரத்தில் நீங்கள் மருத்துவரை அழைத்தால் உடனடியாக அவர் உங்களை தொடர்பு கொள்வார்.
Recommended Video
குறிப்பாக ஒரு மருத்துவரிடம் பெற்ற சிகிச்சையின் ஆவணங்களை செயலியில் அப்லோடு செய்ய வேண்டும். பின்னர் குறிப்பிட்ட மருத்துவரை தேர்வு செய்து அவருக்கு அனுப்பினால் அவர் அதைப் பார்த்து விட்டு உங்களுக்கு அவரது பரிந்துரைகளை தெரிவிப்பார்" என்று அவர் கூறினார்.
-
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications