Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டின் பெருமை! உலகின் மிக பழமையான துறைமுக நகர் "பூம்புகார்".. ஆய்வில் வெளியான புது தகவல்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: சுமார் 8000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பழமையான துறைமுகங்கள் இதுவரை மூன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் பூம்புகார் துறைமுகமும்தான் இதில் மிக பழமையானதாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இந்த துறைமுகம் சுமார் 15 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில்(NIOT), திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பூம்புகார் நகரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பேராசிரியர் ராமசாமி தலைமையிலான இந்த ஆய்வு குழுவானது சுமார் மூன்று ஆண்டுகளாக ஆய்வை மேற்கொண்டு வந்திருக்கிறது. இக்குழு இதேபோல கடந்த 2000ம் ஆண்டில் குஜராத் கடற்கரையில் ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வில் துவாரகா நகரத்தை கண்டுபிடித்தது.

இந்நகரம் தற்போது காம்பே வளைகுடாவில் முற்றிலுமாக மூழ்கியுள்ளது. இதனை ஆய்வு செய்த இக்குழு துவாரகா நகரம் கி.மு 7,500 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை கண்டறிந்தது. இந்தியாவின் மிக பழமையான நகரமான மொஹஞ்சதாரோ 4,500 ஆண்டு காலம் பழமையானது. இந்நிலையில் துவாரகா நகரம் குறித்து பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது இதை விட பழமையான நகரம் பூம்புகார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

பூம்புகார்

பூம்புகார்

இது குறித்து ஆய்வு குழுவின் தலைவர் ராமசாமி கூறுகையில், "தற்போது இருக்கும் நிலப்பரப்பிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் கடலுக்கு அடியில் 50 முதல் 100 மீ ஆழத்தில் துறைமுகம், கப்பல்துறை, மனித குடியிருப்புகள் மற்றும் கலங்கரை விளக்கம் ஆகியவை இருப்பதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். இந்த ஆய்வை நாங்கள் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கினோம். இதற்கு NIOT ஆய்வு கப்பல்களான 'சாகர் தாரா' மற்றும் 'சாகர் அன்வேஷிகா' ஆகியவற்றை பயன்படுத்தினோம். இதற்கு முன்னர் வரை இந்த பூம்புகார் சுமார் 2,500 ஆண்டுகள் பழமையானது என்று நம்பியிருந்தோம். ஆனால் தற்போது எங்களுக்கு கிடைத்த புதிய ஆதாரங்களின்படி நகரத்தின் வயது கூடுதலாக இருக்கும் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறோம்.

பிரமாண்டம்

பிரமாண்டம்

பழைய பூம்புகார் என்பது சுமார் 11 கி.மீ நீளமும், 3 கி.மீ அகலமும் கொண்டிருந்துள்ளது. இந்த துறைமுகத்தில் வந்து நிற்கும் கப்பல்களிலிருந்து சரக்குகளை வேறு இடங்களுக்கு கொண்டு சென்று சேமித்து வைப்பதற்கு ஏதுவாக கால்வாய்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. இங்கிருந்த கப்பல் துறையில் ஒரே நேரத்தில் சுமார் 70-80 கப்பல்கள் வரை நிறுத்தி வைக்கலாம். அந்த அளவுக்கு பெரியதாக இருந்திருக்கிறது. இதனை நாங்கள் கண்டுபிடிக்க சுமார் 6 ஆயிரம் சதுர கி.மீ வரை ஆய்வு செய்தோம். இதில் கப்பலுடன் இணைக்கப்பட்ட மல்டிபீம் எக்கோசவுண்டரையும் நாங்கள் பயன்படுத்தினோம்.

கண்டுபிடிப்பு

கண்டுபிடிப்பு

இந்த மல்டிபீம் எக்கோசவுண்டரால் சேகரிக்கப்பட்ட தகவல்களை வைத்து கடலின் அடியில் உள்ள நிலப்பரப்பை வரைப்படமாக்கினார். இதற்கடுத்து கடலுக்கடியில் உள்ள எச்சங்களை கண்டுபிடிக்க ROV எனப்படும் வாகனத்தை பயன்படுத்தினோம். இதில் கேமிராவுடன் சென்சாரும் இணைக்கப்பட்டிருக்கும். இந்த வாகனத்தின் பணிகள் இன்னும் முழுமையடையவில்லை. தற்போது வரை முடித்துள்ள ஆய்வில், சுவர்கள், கடலோரத்தில் தோண்டப்பட்ட குழிகள், குடியிருப்புகள், கலங்கரை விளக்கத்தின் எச்சங்கள், சுழல் படிக்கட்டுகள் கொண்ட கட்டிடங்கள், தூண்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பழமையானது

பழமையானது

இதில் என்ன ஆச்சரியம் எனில் சில எச்சங்கள் எகிப்தின் கட்டமைப்புகளோடு ஒத்துப்போகிறது. ஆனால் இவ்வளவு சிறப்பான ஒரு நகரம் எப்படி கடலில் மூழ்கியது என்பதுதான் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளம், சுனாமி, கடல் மட்டம் உயர்வு, சூறாவளி, புயல்கள் போன்றவற்றால் இந்நகரம் அழிக்கப்பட்டிருக்கலாம். சுமார் 6,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வரை மயிலாடுதுறை வரை கடல் உட்புகுந்திருக்கலாம். மீண்டும் கடல் பின்வாங்கியதன் காரணமாக இந்த நகரம் அழிக்கப்பட்டிருக்கலாம்" என்று கூறியுள்ளார். மேலும், "இந்த ஆய்வில் 12 அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இந்த ஆய்வு மேலும் ஓராண்டுக்கு தொடரும். ஆதேபோல இந்த ஆய்வுகள் குமரி கண்டம் குறித்த ஆய்வுக்கு பயன்படும்" என்றும் ராமசாமி கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+