காதர் முகைதீன் 5 சீட் கேட்க போறாராம்! இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தொகுதி இதுதான்.. திமுக தருமா?

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திமுக தலைமையிலான கூட்டணியில், கடந்த முறை தேர்தலில் 3 தொகுதிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீகுக்கு ஒதுக்கி தந்தார்கள். வரப்போகும் 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகுக்கு குறைந்தது 5 தொகுதிகளையாவது ஒதுக்கித் தர வேண்டும் என்று கோரிக்கை வைக்க போகிறோம் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் முகைதீன் செய்தியாளர்களை சந்தித்து பேசியிருந்தார்.. அப்போது அவர் சொல்லும்போது, தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை முஸ்லிம் சமூகம் ஒட்டுமொத்தமாக ஆதரிக்கிறது. நேற்று இன்று நாளை என எப்போதுமே திமுக கூட்டணியில்தான் இருப்போம் என்று உறுதிபட தெரிவித்திருந்தார்.

Kader Mohideen IUML DMK

திருச்சியில் பேட்டி

தமிழகத்தில் விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில், கூட்டணி, சீட் விவகாரங்கள் தமிழக அரசியல் கட்சிகளிடம் தலைதூக்கி வருகின்றன..

இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் முகைதீன், அக்டோபர் .26ம் தேதி சென்னை பெரியார் திடலில் மறைந்த தலைவர் அப்துல்சமது நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 8,000 மஹல்லா ஜமாத் நிர்வாகிகள் மாநாடு டிச.28-ம் தேதி கும்பகோணத்தில் நடைபெறும்.

காதர் முகைதீன்

கேரளா (கேஎம்சிசி) இஸ்லாமிய கலாச்சார அமைப்பு சார்பில், மும்மத திருமணம் 2026-ம் ஆண்டு ஜன.8-ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் 2026-ம் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் யூகங்கள், கருத்துகளை எதிர்க்கட்சியும், புதிய கட்சியும் உருவாக்கி வருகின்றன. தமிழகத்தை ஆளும் திராவிட மாடல் அரசு இதுவரை செய்த பல நல்ல காரியங்கள் மக்களால் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளன. வரும் தேர்தலில் மதச்சார் பற்றக் கூட்டணி வெற்றி பெற்று, மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும்.

திமுகவுடனே கூட்டணி

அண்மையில் இலங்கை சென்று பிரதமர் ஹரினியை சந்தித்து, "தமிழக மீனவர்களை காக்கும் வகையில் இந்தோ- ஸ்ரீலங்கா பிஷ்ரீஸ் கார்ப்பரேஷன் அமைப்பை இரு நாடுகளும் சேர்ந்து உருவாக்கி, இரு நாட்டு மீனவர்களையும் உறுப்பினர்களாக்கி கச்சத்தீவில் மீன்பிடிக்க உரிமையை வழங்கினால், அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும்" என்று சொன்னேன். இதையடுத்து அவர், டெல்லியில் இந்திய அதிகாரிகளிடம் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு இந்திய அரசு பல்வேறு உதவிகளை செய்து வரும் நிலையில், தமிழக மீனவர்களை காக்கும் வகையில் புதிய திட்டத்தை அமல்படுத்தி, கச்சத்தீவில் மீன்பிடிக்க உரிமையை வழங்க வேண்டும்.

திமுகவுடனான கூட்டணி என்பது தேர்தலுக்கானது கிடையாது. கொள்கை ரீதியானது... திமுகவுடன் தான் கூட்டணி... வேறு கூட்டணி பற்றி சிந்தித்ததோ, கனவுகூட கண்டதோ கிடையாது.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-க்கு 5 தொகுதிகள் வழங்க வேண்டும் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது.

5 தொகுதிகளை கேட்போம்

அதன்படி திருச்சி, சென்னை, கடலூர், நெல்லை, தஞ்சாவூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் 5 தொகுதிகளை எதிர்பார்க்கிறோம். அதிமுக-பாஜக கூட்டணியில் தவெக இணையும் என்ற பேச்சு பரவலாக உள்ளது. இவை ஒன்றிணைந்தால் திமுகவுக்கு சவாலாக இருக்குமா என்று கேட்டால், தேர்தலே சவாலாக தான் இருக்கும்.

வருகிற சட்டமன்ற தேர்தலில் சீமான் தனியாக நிற்பார். ஆகவே தமிழகத்தில் 3 அணியாக போட்டி இருக்கும். சட்டசபை தேர்தலே சவாலாக இருக்கும். மக்கள் தான் எஜமானர்கள். திராவிட மாடல் அரசுக்கு மக்கள் வெற்றியை தேடி தருவார்கள். பிரச்சாரத்துக்கு வரும் கூட்டம் வாக்குகளாக மாறாது என்பது தான் கடந்த கால வரலாறு" என்று தெரிவித்துள்ளார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+