திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் கார் விபத்து.. திருச்சியில் பரபரப்பு

Google Oneindia Tamil News

திருச்சி: தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்தில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயமுமின்றி தப்பினர்.

Recommended Video

    சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்து... உயிர் தப்பிய ராதாகிருஷ்ணன்!

    தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக சுகாதாரத் துறை செயலாளராக பொறுப்பேற்ற ஜெ ராதாகிருஷ்ணன் கடந்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் தமிழகத்தில் உச்சத்தில் இருந்த கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்தினார்.

     3 வேளாண் சட்டங்கள் ரத்து.. மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கினார் குடியரசு தலைவர் 3 வேளாண் சட்டங்கள் ரத்து.. மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கினார் குடியரசு தலைவர்

    கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த வைரஸ் மோசமான அளவுக்கு பரவாத நிலையில் நிறைய விஷயங்களை புகுத்தினார். ஊடரங்கு, சுழற்சி முறையில் கடைகள் திறப்பு, தடுப்பூசி உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

    கட்டுப்படுத்த

    கட்டுப்படுத்த

    இதனால் கொரோனா முதல் அலை கட்டுப்படுத்தப்பட்டதற்கு கொரோனா முன்கள வீரர்களுடன் இவரும் ஒரு காரணமாக திகழ்ந்தார். மாஸ்க் போடாவிட்டால் அபராதம் உள்ளிட்டவற்றை அமல்படுத்தினார். இதில் மக்களுக்கு கோபம் இருந்தாலும் நோயின் தீவிரம் புரிந்து கொண்ட பின்னர் மக்களுக்கு இவர் மீது இருந்த கோபமும் போய்விட்டது.

    மாநகராட்சி ஆணையர்

    மாநகராட்சி ஆணையர்

    திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாநகராட்சி ஆணையர், தமிழக தலைமைச் செயலாளர் உள்ளிட்ட முக்கியமான ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றியது. ஆனால் கொரோனா முதல் அலையில் ராதாகிருஷ்ணனின் பணி மிகவும் திருப்தியளித்ததால் அவரே தற்போது வரை தமிழக சுகாதாரத் துறை செயலாளராகவே நீடித்து வருகிறார்.

    சுகாதாரத் துறை செயலாளர்

    சுகாதாரத் துறை செயலாளர்

    தமிழகத்தில் பல்வேறு அதிகாரிகளை இடமாற்றிய போதிலும் சுகாதாரத் துறை செயலாளராக உள்ள ஜெ ராதாகிருஷ்ணனை பணியிடம் மாற்றாதது திருப்தி அளிக்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதிலிருந்தே ராதாகிருஷ்ணனின் பணி எத்தகையது என தெரிந்து கொள்ளலாம்.

    உக்கிரம்

    உக்கிரம்

    வெளிமாநிலங்களில் மிகவும் உக்கிரமாக இருந்த கொரோனா இரண்டாவது அலை அங்கு ஒப்பிடும் போது இங்கு குறைந்து காணப்பட்டதற்கு இவரும் ஒரு பங்கு என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த அளவுக்கு சும்மா ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு அறிக்கை வெளியிடாமல், இறங்கி ஃபீல்டு வொர்க் செய்தார். அது போல் கருப்பு பூஞ்சையையும் கணிசமாக கட்டுப்படுத்தினார்.

    புதிய வைரஸ்

    புதிய வைரஸ்

    தற்போது ஓமிக்ரான் எனும் புதிய வைரஸ் வெளிநாடுகளில் பரவி வருகிறது. இது தமிழகத்தில் பரவக் கூடாது என்பதற்காக விமான நிலையங்களில் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. வெளிநாட்டு பயணிகளால் பரவும் என்பதால் அனைத்து விமான நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பு இருக்கிறது.

    விமான நிலையம்

    விமான நிலையம்

    மதுரை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த ஜெ ராதாகிருஷ்ணன் திருச்சி விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா சோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய சென்றிருந்தார். அப்போது திருச்சி விமான நிலையத்திற்கு அருகே கார் சென்ற போது அங்கிருந்த தடுப்புச் சுவரில் மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. பின்னர் வேறு ஒருவரின் காரில் திருச்சி விமான நிலையத்திற்கு சென்றார் ராதாகிருஷ்ணன். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    English summary
    TN Health Secretary J Radhakrishnan's car met with an accident.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X