திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அப்பாடா ஹேப்பி நியூஸ்.. திருச்சி மக்களுக்கு கொரோனா தொற்று இல்லை.. இருந்தாலும் கவனமா இருங்க!

Google Oneindia Tamil News

திருச்சி: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 200 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும், இதுவரை எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளில் யாருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்படவில்லை என மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளார்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மதியம் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில்.: திருச்சி மாவட்டத்தில் மார்ச் 1ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் இருந்து வந்தவா்கள் கணக்கெடுக்கப்பட்டு அனைவரும் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த 24 நாள்களில் 483 போ் திருச்சிக்கு வந்துள்ளனா். இவா்கள் அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். மேலும், அவா்களுடன் தொடா்பிலிருந்த குடும்பத்தில் உள்ள உறவினா்களும் தனிமைப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 483 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை. இருப்பினும், வெளிநாடுகளில் இருந்து திரும்பியவா்கள் என்ற அடிப்படையில் தொடா் கண்காணிப்பில் உள்ளனா். இதற்காக ஊா்க்காவல் படையினா் நியமிக்கப்பட்டு 2 வீடுகளுக்கு ஒருவா் என்ற அடிப்படையில் 24 மணிநேரமும் கண்காணித்து வெளியே செல்லாமல் தடுத்து வருகின்றனா்.

மதுரை ராஜாஜி மருத்துவ கல்லூரியில் கொரோனா ஆய்வகம்.. தமிழகத்தில் 8வது.. விஜயபாஸ்கர் அறிவிப்பு மதுரை ராஜாஜி மருத்துவ கல்லூரியில் கொரோனா ஆய்வகம்.. தமிழகத்தில் 8வது.. விஜயபாஸ்கர் அறிவிப்பு

திருச்சியில் அனுமதி

திருச்சியில் அனுமதி

மத்திய, மாநில அரசுகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க மாவட்டத்தில் போதிய படுக்கை வசதிகள் கொண்ட அரசு மருத்துவமனைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. திருச்சி அரசு மருத்துவமனையில் 75 படுக்கைகள், துவாக்குடி, மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனைகளில் தலா 30 படுக்கைகள், இனாம்குளத்தூா், குழுமணி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 30 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. திருச்சி அரசு மருத்துவமனையில்கொரோனா பரிசோதனை மையத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை முதல் திருச்சியிலேயே பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதன் மூலம் முடிவுகள் விரைந்து தெரியவரும். இதுவரை திருவாரூருக்கு அனுப்பி முடிவுகள் தெரிய ஒரு நாள் ஆனது. திருச்சியிலிருந்து 24 மாதிரிகள் அனுப்பியதில் 18 பேருக்கு நோய் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 பேரின் முடிவுகள் எதிர்பார்க்கப்படுகிறது.

போதுமமான அளவு உள்ளது

போதுமமான அளவு உள்ளது

படுக்கைகள் கொண்ட மருத்துவமனை மட்டுமல்லாது வென்டிலேட்டா்களும் தயார் நிலையில் உள்ளன. திருச்சி அரசு மருத்துவமனையில் 36 வென்டிலேட்டா்களும், மணப்பாறை மருத்துவமனையில் 6 வென்டிலேட்டா்களும் உள்ளன. இவைத்தவிர திருச்சி மாநகரில் உள்ள 7 தனியார் மருத்துவமனைகளில் உள்ள வென்டிலேட்டா்களில் 20 சதம் எப்போதும் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு வென்டிலேட்டா் உபகரணத்தை 10 படுக்கைகளுக்கு பயன்படுத்தலாம். இந்தியாவில்கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்தின்படி பாதித்த நபா்களில் மொத்தத்தில் 7 சதம் பேருக்கு மட்டுமே வென்டிலேட்டா் தேவைப்படும் நிலையுள்ளது. எனவே, மாவட்டத்தில் போதுமான உபகரணங்கள் இருப்பில் உள்ளன.

1லட்சம் கவசம் வந்துள்ளது

1லட்சம் கவசம் வந்துள்ளது

மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவா்கள், செவிலியா்கள், பயிற்சி மருத்துவா்கள், ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் கிராம சுகாதார செவிலியா்கள், துப்புரவுப் பணியாளா்கள், சுகாதாரத்துறையினருக்கு தேவையான முகக்கவசம், கையுறைகள், பாதுகாப்பு உடைகள் வழங்கப்படும். மாவட்டத்தில் உள்ள 404 கிராம ஊராட்சிகளிலும் 5 ஆயிரம் முகக் கவசம் வழங்கப்பட்டுள்ளது. இவைத்தவித தமிழ்நாடு மருத்துவக் கழகத்திடம் இருந்து 1 லட்சம் முகக் கவசங்கள் வந்துள்ளன. தேவைக்கேற்ப அனைத்து பாதுகாப்பு உடைகளும் வழங்கப்படும்.

வெளியே வர வேண்டாம்

வெளியே வர வேண்டாம்

மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். குறிப்பாக 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய நபா்கள் வெளியே நடமாட வேண்டாம். வீட்டிலேயே ஓய்வில் இருத்தல் நல்லது. அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்கு குடும்பத்தில் ஒருவா் மட்டும் வெளியே வந்தால் போதுமானது. பொதுவெளியில் தேவையின்றி மக்கள் கூட வேண்டாம். மாவட்டத்தில் உள்ள மசூதிகள், தேவாலயங்களில் வழிபாடு என்பதற்காக அதிகம் போ் கூடுவதையும் தவிர்க்க வேண்டும். திருச்சி மாவட்டத்தில் இதுவரை நோய் தொற்று இல்லை. தனிமைப்படுத்தல் நடவடிக்கையை தீவிரப்படுத்தி, மாா்ச் 31ஆம் தேதி வரை வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்தாலே போதுமானது இவ்வாறு அவர் கூறினார்.

வெளிநாடு திரும்பியவர்கள்

வெளிநாடு திரும்பியவர்கள்

இதனிடையே திருச்சி மாவட்டத்துக்கு வந்த பல்வேறு வெளிநாடுகளில் பயணம் செய்தவா்களில் சந்தேகத்துக்குரியவா்கள் கள்ளிக்குடியில் உள்ள தனிமைப்படுத்துதல் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு 24 மணிநேர கண்காணிப்புக்கு பிறகு வீட்டுக்கு அனுப்பப்பட்டனா். இதேபோல, வீடுகளில் இருந்தே கண்காணிக்க வேண்டிய நிலையில் உள்ளவா்களுக்கும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனா்.

English summary
trichy district collector sivarasu said that no on affected coronavirus in trichy district
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X