ஐயா நில்லுங்க.. திடீரென எழுந்த குரல்.. உடனே வாகனத்தை நிறுத்திய முதல்வர்.. மாற்றுத்திறனாளி நெகிழ்ச்சி
திருச்சி: தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று அரசுமுறைப்பயணமாக திருச்சி வருகை வந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த முதல்வர் மு.க ஸ்டாலின், திருச்சி விமான நிலையத்தில் இருந்து வேன் மூலம் அரசு விழா நடைபெறும் அண்ணா விளையாட்டு அரங்கத்திற்கு வருகை தந்தார். அப்போது வரும் வழியில் மாற்றுத்திறனாளி ஒருவரிடம் இருந்து முதல்வர் ஸ்டாலின் மனுவை பெற்றுக்கொண்டார்.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் முதல்வர் மு.க ஸ்டாலின் புதிய திட்டங்களை தொடங்கி வைப்பது, மக்கள் நலத்திட்ட உதவிகளை அளிப்பது என நலத்திட்ட பணிகளை செய்து வருகிறார்.

திருச்சிக்கு மு.க ஸ்டாலின் வருகை
அந்த வகையில் இன்று அரசுப் பயணமாக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று திருச்சி சென்றார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் அமைச்சர்கள் கே.என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் இருந்து வேன் மூலம் விழா நடைபெறும் அண்ணா விளையாட்டு அரங்கத்திற்கு முதல்வர் வருகை தந்தார்.

மாற்றுத்திறனாளி ஒருவர்
அப்போது வழி நெடுக இருபக்கமும் திமுகவினரும் பொதுமக்களும் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்ததை காண முடிந்தது. கட்சியினர் மற்றும் பொதுமக்கள் வரவேற்பை ஏற்றுக்கொண்டு சிரித்த முகத்துடன் மு.க ஸ்டாலின் வருகை தந்தார். அப்போது முதல்வர் வரும் பாதையில் மூன்று சக்கர வாகனத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் காத்திருந்தார். முதல்வரின் வாகனம் நெருங்கியதும் தனது கையில் வைத்திருந்த மனுவை முதல்வரிடம் வழங்க முயற்சித்தார்.

மனுவை வாங்கினார்
முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு பாதுகாப்பாக வந்த பாதுகாப்பு அதிகாரிகள் மாற்றுத்திறனாளி வைத்திருந்த மனுவை வாங்கி முதல்வரிடம் வழங்கினர். பின்னர் மாற்றுத்திறனாளி அளித்த கோரிக்கைகளையும் முதல்வர் கவனத்துடன் கேட்டுக்கொண்டர். இதையடுத்து, அங்கிருந்து முதல்வர் மு.க ஸ்டாலின் வாகனம் கிளம்பி சென்றது. வழிநெடுக கட்சியினர் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்ட அண்ணா விளையாட்டு அரங்கத்துக்கு வந்து சேர்ந்தார்.

தமிழர்களை செழிக்க வைப்பதே
அங்கு ரூ. 655 கோடி மதிப்பில் 5,639 புதிய திட்டப் பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார். அதேபோல், ரூ. 308 கோடி மதிப்பில் 5,951 புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். பின்னர் விழாவில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், தமிழ்நாட்டையும், தமிழர்களையும் செழிக்க வைப்பதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம் ஆகும். புதிய துறைகளில் தமிழ்நாடு முதலீடுகளை ஈர்த்து வருகிறது. மற்ற மாநிலங்களிலிருந்து மட்டுமல்ல பல்வேறு நாடுகளிலிருந்தும் தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வருகின்றன.

சர்வதேச தரத்தில் ஒலிம்பிக்..
மகளிர் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதை அரசின் கடமையாகவும் பொறுப்பாகவும் பார்க்கிறோம். சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மணிமேகலை விருது அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் 4 மண்டலங்களில் ஒலிம்பிக் அகடாமி அமைக்கப்பட உள்ளது. திருச்சியில் சர்வதேச தரத்தில் ஒலிம்பிக் அகாடமி அமைய உள்ளது" என்றார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications