தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த தெலுங்கானா முதல்வர் – நாளை தமிழக முதல்வருடன் சந்திப்பு
திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் மேற்கொண்ட தெலுங்கான முதலமைச்சர் சந்திரசேகரராவ் கோவிலை தமிழக அரசு பராமரித்து வருவதாகவும், அதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார்.
Recommended Video
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் சாமி தரிசனம் செய்தார். இதற்காக தெலுங்கானாவில் இருந்து முதலமைச்சர் சந்திரசேகரராவ் இன்று காலை தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். அவரது வருகையையொட்டி திருச்சியில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.

பின்னர் அங்கிருந்து தரை மார்க்கமாக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்தடைந்த அவருக்கு கோவில் ஆணையர் மாரிமுத்து மற்றும் சுந்தர் பட்டர் ஆகியோர் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து ஆண்டாள் யானையிடம் ஆசி பெற்ற அவர் ஸ்ரீரங்கநாதர் மூலஸ்தானத்துக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து தாயுமானவர் சன்னிதிக்குச் சென்று சுவாமியை வழிபட்டார்.
பின்னர் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு இரண்டாவது முறை வந்துள்ளேன், மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது எனவும், கோவிலை சிறப்பாக பராமரித்து வருகிறார்கள், அதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.
மேலும், தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறை தமிழ்நாடு வந்துள்ளேன் எனவும், நாளை மாலை சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அவரை நாளை சந்திக்க உள்ளேன் எனவும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications