கொங்கு நாடு.. வாய்ப்பே இல்லை.. குரல் கொடுத்த திருநாவுக்கரசர் .. ராமதாஸ் மீதும் தாக்கு!
திருச்சி : தமிழ்நாட்டில் 'கொங்கு நாடு' என்று ஒன்றில்லை. ஒரே ஒரு நாடு தமிழ்நாடு மட்டும்தான். அந்தபக்கம் டாக்டர் ராமதாஸ் வட மாவட்டங்களை பிரித்து கேட்கிறார். இந்தபக்கம் இவர்கள் கேட்கிறார்கள். இப்படி பிரித்துக் கொண்டே சென்றால் என்னாவது? என்று திருச்சி லோக்சபா தொகுதி எம்பி திருநாவுக்கரசர் கூறினார்.
தற்போது கொங்கு நாடு என்று தனியாக பிரிப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் வருங்காலங்களில், மக்கள்தொகை பெருக்கம், நிர்வாக வசதிகளுக்காக வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பிருக்கிறது என்றும் திருநாவுக்கரசர் எம்.பி கூறியுள்ளார்.
திருச்சி விமான நிலைய ஆணையக்குழு ஆலோசனை கூட்டம், திருச்சி லோக்சபா எம்பி திருநாவுக்கரசர் தலைமையில் நடந்தது. இதில், விமான நிலைய இயக்குனர் தர்மராஜ், எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் உள்ளிட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றார்கள்.

ராஜ்நாத் சிங்
இந்த கூட்டத்திற்கு பின் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசும் போது , திருச்சி விமான நிலையத்தை விரிவுப்படுத்த சுமார், 700 ஏக்கர் நிலம் தேவையாகும். ராணுவத்திடம் உள்ள நிலத்தை பெற, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து அண்மையில் வலியுறுத்தினேன். ராணுவ நிலத்தை வழங்க, உரிய ஏற்பாடுகளை செய்கிறேன் என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்தார்.

46 ஏக்கர் நிலம்
மற்ற இடங்களில் பொதுமக்களின் ஒப்புதலோடு நிலம் எடுக்க வேண்டும். அதனால் தான் நிலம் கையகப்படுத்தும் பணிகள் மெதுவாக நடந்து வருகிறது. திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்காக இதுவரை, 46 ஏக்கர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டிருக்கிறது. விமான நிலைய ஓடுதள விரிவாக்கப் பணிகள், தொடர்மழை மற்றும் கொரானா காரணமாக குறித்த நேரத்தில் முடிக்க முடியவில்லை. வரும், 2022 ஜூலை மாதத்திற்குள் பணிகள் முடிவடையும் என்றார்.

ராமதாஸ்
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த திருநாவுக்கரசர் தமிழ்நாட்டில் 'கொங்கு நாடு' என்று ஒன்றில்லை. ஒரே ஒரு நாடு தமிழ்நாடு மட்டும்தான். அந்தபக்கம் டாக்டர் ராமதாஸ் வட மாவட்டங்களை பிரித்து கேட்கிறார். இந்தபக்கம் இவர்கள் கேட்கிறார்கள். இப்படி பிரித்துக் கொண்டே சென்றால் என்னாவது?

வருங்காலத்தில் நடக்கலாம்
எனக்கு தெரிந்து, தற்போது கொங்கு நாடு என்று தனியாக பிரிப்பதற்கு வாய்ப்பில்லை. வருங்காலங்களில், மக்கள்தொகை பெருக்கம், நிர்வாக வசதிகளுக்காக வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

கேட்கவில்லை
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை முயற்சிப்பதாக கூறப்படுவது குறித்து விளக்கம் அளித்த திருநாவுக்கரசர், நான் யாரிடமும் சென்று மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி வேண்டும் என்று கேட்கவில்லை. அதற்கான முயற்சியும் மேற்கொள்ளவில்லை.தலைமை எனக்கு பணித்தால், அந்த பணியை திறம்பட செய்ய நான் தயாராக இருக்கிறேன். வரும் உள்ளாட்சி தேர்தலிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடரும்" இவ்வாறு கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications