இன்டர்வியூக்கு போன ஜாஸ்மின்.. கரெக்ட்டா காதலனின் பிறந்த நாளில்.. திருச்சியில் என்ன நடந்தது தெரியுமா?
திருச்சி: திருச்சியை சேர்ந்த 22 வயது பட்டதாரி இளம்பெண், இன்டர்வியூ இருப்பதாக வீட்டில் சொல்லிவிட்டு சென்றுள்ளார்.. அதற்கு பிறகு வீட்டுக்கு வரவில்லை. இதனால் பதறிப்போன குடும்பத்தினர் போலீசில் சென்று புகார் தந்துள்ளனர். இந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், பல பகீர் தகவல்கள், திருச்சி பெண் மாயமான விவகாரத்தில் வெளியாகி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ளது பேரளி என்ற கிராமம்.. இங்கு வசித்து வரும் தம்பதி அந்தோணிசாமி - கலாவதி.. இந்த தம்பதிக்கு 2 மகன்களும், 22 வயதில் ஜாஸ்மின் என்ற மகளும் உள்ளார்..

அந்தோணிசாமி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். ஜாஸ்மின் எம்எஸ்சி பட்டதாரி. என்பதால், 2 நாட்களுக்கு முன்பு, நேர்முகத் தேர்வுக்கு செல்வதாக சொல்லிவிட்டு வெளியே சென்றிருக்கிறார்.. ஆனால் அதற்கு பிறகு அவர் வீடு திரும்பவில்லை...
சிறுகனூரில் அதிர்ச்சி சம்பவம்
இதனால் பதறிப்போன அம்மா கலாவதி, மகளின் செல்போனுக்கு போன் செய்துள்ளார்.. ஆனால், ரிங்க் போனதே தவிர, யாருமே எடுக்கவில்லை. இதனால் மேலும் கலக்கமடைந்த கலாவதி, உடனடியாக திருச்சி போலீசுக்கு சென்று, மகளை காணவில்லை என்று புகார் தந்தார்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தநிலையில்தான், மணச்சநல்லூர் அருகே உள்ள சிறுகனூர் சனமங்கலம் காட்டுக்குள் இளம்பெண்ணின் உடல் பாதி எரிந்த நிலையில், பிணமாக கிடப்பதாக தகவல் பரவியது.. இதனால் போலீசார் சம்பந்தப்பட்ட இடத்துக்கு விரைந்து சென்றார்கள்.. எரிந்து கிடந்த உடலை ஆய்வு செய்து, விசாரித்தபோதுதான், அது காணாமல் போன மீரா ஜாஸ்மின் என்பது தெரியவந்தது.
செருப்புகள், பீர் பாட்டில்கள்
சடலத்தின் அருகில் பர்ஸ், செல்போன், செருப்புகள் சிதறி கிடந்தன. பீர் பாட்டில்களும், சிகரெட் துண்டுகளும் விழுந்து கிடந்தன. டூவீலர் வந்த தடயங்கள் பதிவாகியிருந்தன.. பாதி எரிந்த நிலையில், உடல் நிர்வாணமாக கிடந்தது..
இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, பிறகு கழுத்தை நெரித்து கொன்றிருக்கலாம் என்றும், சடலத்தின் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக பெட்ரோலை ஊற்றி எரித்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகித்தனர்.
எனவே மீரா ஜாஸ்மின் உடலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்து, விசாரணையை தீவிரப்படுத்தினர்.
பிஆர் சட்டத்தில் வழக்கு
அதற்குள் மீரா ஜாஸ்மின் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை சிறுகனூரில் ஏற்படுத்திவிட்டது.. குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மீரா ஜாஸ்மினின் உறவினர்கள், திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர்.. இவர்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் என பல்வேறு தரப்பினரும் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்..
குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது பிசிஆர் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர வேண்டும் என்றும், இறப்புக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். பிறகு தகவலறிந்து வந்த அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, தில்லை நகர் உறையூர் செல்லும் வாகனங்களும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
வாடகை வீட்டில் குடியிருப்பு
இதனிடையே, மீரா ஜாஸ்மின் கொலை விசாரணையை போலீசார் விரிவுபடுத்திய நிலையில், பல்வேறு தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை தந்து வருகின்றன..
அதாவது கொலை செய்யப்பட்ட மீரா ஜாஸ்மின் கல்லூரி படிக்கும்போது,
திருச்சி சீனிவாச நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தன்னுடைய அம்மாவுடன் தங்கி இருந்தாராம். அப்போது காலேஜில் படித்து வந்தபோது, தன்னுடைய தோழியின் அண்ணனை காதலித்து வந்துள்ளார்..
காதலனின் பிறந்தநாள்
ஆனால் ஒருகட்டத்தில் மீராஜாஸ்மின் அந்த காதலனை பிரிந்துவிட்டாராம். திடீரென தன்னுடைய காதலி பேசாமல் போனதால், விரக்தி அடைந்த தோழியின் அண்ணன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த தற்கொலையானது தோழியின் குடும்பத்தினரை நிலைகுலைய வைத்துவிட்டது.. தங்கள் பிள்ளை தற்கொலை செய்து கொள்ள காரணமே, காதலித்து ஏமாற்றி சென்ற மீரா ஜாஸ்மின்தான் என்று ஆவேசமானார்கள்.. இதற்காகவே மீரா ஜாஸ்மினை பழிக்கு பழி வாங்க வேண்டும் என்று தோழியின் உறவினர்கள் முடிவெடுத்தார்களாம்.
எனவே, மீரா ஜாஸ்மினை கடத்திச் சென்று கொலை செய்தது, தோழியின் உறவினர்கள் என்று கூறப்படுவதால், அவர்களிடம் விசாரணை திரும்பியிருக்கிறது. குறிப்பாக தோழியின் குடும்பத்தினர் 2 பேரை விசாரணைக்குட்படுத்தி உள்ளனர்.
செல்போன் எங்கே
அதாவது கடந்த 30ம் தேதிதான், மீரா ஜாஸ்மின் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.. அன்றைய தினம்தான் காதலனின் பிறந்தநாள் ஆகும்.. எனவே பழிக்குப்பழியாக காதலனின் உறவினர்கள் அதே நாளில் மீரா ஜாஸ்மினை கடத்தி கொன்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
ஆனால், மீரா ஜாஸ்மினின் செல்போனை காணவில்லையாம்.. செல்போனை கைப்பற்றினால் மேலும் பல தகவல்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications