மூன்றாவது அணி: மோடிக்கு மாற்று ராகுல்.. பாஜகவுக்கு மாற்று காங்கிரஸ் மட்டுமே.. திருச்சி எம்பி தடாலடி!
திருச்சி: பாஜகவுக்கு மாற்றாக மற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து செல்லும் பெரிய கட்சி காங்கிரஸ்தான் என திருச்சி எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
திருச்சி தெப்பக்குளத்தில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்றது. இதில்
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு கேக் வெட்டி இனிப்புகளை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருநாவுக்கரசர் திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை மக்கள் தொகை அதிகம் உள்ள இடம், அதே போல் வெளியூர் மக்கள் அதிகம் வந்து செல்லக் கூடிய ஒரு இடம்.

தேசிய அளவில் 3ஆவது அணி
பஞ்சப்பூரில் மிகப்பெரிய பேருந்து நிலையம், ரிங் ரோடுகள் போன்ற திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. எனவே இங்கு உள்ள சாலை பிரச்சனைகள் வரும் நாட்களில் முழுமையாக சரி செய்யப்படும் என்றார். தேசிய அளவில் 3வது அணியை மம்தா பானர்ஜி உருவாக்குவதில் முனைப்பு காட்டி விடுகிறார் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்தியாவில் காங்கிரஸ்
அதற்கு திருநாவுக்கரசர், யார் வேண்டுமானாலும் பிரதமராக வேண்டும் என்கிற முயற்சியில் ஈடுபடலாம். ஆனால் பி.ஜே.பிக்கு மாற்று இந்தியாவில் காங்கிரஸ் மட்டுமே, அதேபோல் நரேந்திர மோடிக்கு மாற்றாக அடுத்த பிரதமர் என்றால் கண்டிப்பாக அது ராகுல்காந்தி தான். இந்தியாவில் தற்போதைய நிலையில் பாரதிய ஜனதா கட்சிக்கு மாற்று என்றால் மற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து
மிக பெரிய கட்சியாக உள்ள காங்கிரஸ் மட்டுமே.

அமைச்சர் பதவி
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருவது குறித்த கேள்விக்கு? அவர் கூறுகையில் அமைச்சராக வேண்டும் என்றால் அதற்கு பிரதானமானது சட்டமன்ற உறுப்பினர் பதவி. எனவே உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கினால் என்னுடைய வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.

உத்தேசம்
3ஆவது அணியை உருவாக்க திமுக தலைவர் ஸ்டாலினும் உத்தேசித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதிலும் காங்கிரஸ் இல்லாமல் அமைக்க முயற்சிப்பதாகவும் அவ்வாறு செய்ய வேண்டாம் என திருமாவளவன் கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் இந்தியாவில் பாஜகவுக்கு மாற்று காங்கிரஸ் மட்டுமே என திருச்சி எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
திருமாவளவன் குற்றச்சாட்டால் ஆடிப்போன ராகுல், சோனியா.. அடுத்து என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்? -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
திருச்சி கிழக்கு விஜய் வென்ற தொகுதி.. அங்கு காங்கிரஸ் போட்டியிடாது.. ராஜேஷ் குமார் திட்டவட்டம்! -
இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் விஜய்யின் தவெகவுக்கு அழைப்பு இல்லையா? பின்னணி தகவல் -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications