ரயிலுக்கு அடியில் போன ஜெயச்சந்திரன்.. நிற்கும் முன்பே கால் வைத்து.. பரபரத்த திருச்சி ரயில்வே ஸ்டேஷன்
திருச்சி: ரயில் நிற்பதற்கு முன்பாகவே, ஓடும் ரயிலில் ஏறிய நபர் திடீரென கால் இடறி, ரயிலுக்கு அடியில் சிக்கி கொண்டுவிட்டார்.. இதனால் திருச்சி ரயில்வே ஸ்டேஷனில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.
திருச்சி ரயில் நிலையத்தில், பல்லவன் விரைவு ரயிலில் ஜெயச்சந்திரன் என்பவர் பயணம் செய்துள்ளார்.. ரயிவே ஸ்டேஷன் வந்ததுமே, எழுந்து நின்று கொண்ட ஜெயச்சந்திரன், ரயில் நிற்பதற்கு முன்பாக இறங்கமுயன்றார்..

இதில், திடீரென கால் தவறி விழுந்துவிட்டார்.. பிளாட்பாரத்துக்கும், ரயிலுக்கும் இடையில் ஜெயச்சந்திரன் சிக்கிக்கொண்டதை பார்த்து பயணிகள் அனைவரும் பதறினார்கள்.. இதையடுத்து, உடனடியாக ரயில் நிலைய போலீசாருடன் சக பயணிகளும், இணைந்து ஜெயச்சந்திரனை மீட்க உதவினார்கள்..
இறுதியில், சிறிது நேர பரபரப்புக்கு பிறகு, ரயிலுக்கு அடியில் சிக்கி கொண்டிருந்த ஜெயச்சந்திரனை பாதுகாப்பாக மீட்டனர்.. இதனால் திருச்சி ரயில்வே சந்திப்பில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது. ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஜெயச்சந்திரன் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.. அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து, தற்போது உடல்நலத்துடன் உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ரயிலில் விபத்தில் சிக்கிய ஜெயச்சந்திரன், ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி ஆவார்.
தமிழகத்தை பொறுத்தவரை, ரயில் பயணத்தின்போது தவறி விழுந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தவாறே உள்ளது.. கடந்த 50 மாதங்களில், மொத்தம் 87 பேர் ரயிலிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்திருக்கிறார்களாம்.. இதில், அதிகபட்சமாக கடந்த வருடம் மட்டுமே 42 பேர் ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக ஆர்டிஐ தகவல் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications