திருச்சியில் இருந்து ஷார்ஜா செல்லும் விமானத்தில் திடீர் சிக்கல்.. 116 பயணிகள் உயிர் தப்பினார்கள்
திருச்சி: திருச்சியில் இருந்து ஷார்ஜா செல்லும் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. தக்க சமயத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் 116 பயணிகள் உயிர் தப்பினார்கள். விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகள் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 9.45 மணிக்கு திருச்சியில் இருந்து ஷார்ஜாவிற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்படுவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது.

அப்போது அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து விமான நிறுவனத்தின் சார்பில், தொழில்நுட்ப கோளாறை சரி செய்வதற்கான பணியினை தொழில்நுட்ப வல்லுனர்கள் மேற்கொண்டனர். ஆனால் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்படாததால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
இதையடுத்து அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகள் 116 பேர், விமான நிறுவனத்தின் சார்பில் விமான நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர். அந்த விமானத்தின் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட பின்னர் இன்று(செவ்வாய்க்கிழமை) இரவு 9.45 மணிக்கு விமானம் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் துபாயில் இருந்து திருச்சிக்கு நேற்று இரவு 7.30 மணிக்கு வரவேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்ப காரணங்களுக்காக ரத்துசெய்யப்பட்டது. அந்த விமானம் இன்று காலை 8.15 மணிக்கு திருச்சிக்கு வந்தடையும் என்றும், அந்த விமானம் மீண்டும் நாளை மாலை 4.15 மணிக்கு ஷார்ஜா நோக்கி புறப்பட்டுச் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு, மற்றொரு விமானம் ரத்து போன்றவற்றால் பயணிகள் பெரும் அவதியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
-
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
திருச்சியில் பட்டப்பகலில் கொடூரம்.. 17 வயது பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம்.. போலீஸ் தீவிர வலைவீச்சு -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications