விஜய் வசமா மாட்டிகிட்டாரே.. சர்ச்சில் முட்டி போட்டு நடந்து சென்று வழிபாடு.. ஆன "இதை" மறந்துட்டாரே
திருச்சி: நடிகரும் தவெக தலைவருமான விஜய் இன்றைய தினம் திருச்சி கிழக்கு தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார். இன்றைய தினம் அவர் கோயில், பள்ளிவாசல் மற்றும் சர்ச்சிற்கு சென்று வழிபாடு நடத்திய நிலையில், அதுவே இப்போது சர்ச்சையாக வெடித்துள்ளது. இதனால் விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.
கோலிவுட் டூ கோட்டை என்ற இலக்கை நோக்கித் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய், இப்போது தேர்தல் களத்தில் தனித்துப் போட்டியிடுகிறது. அவரது கட்சி மாநிலம் முழுக்க தனித்துக் களமிறங்கும் நிலையில், விஜய் பெரம்பலூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இன்றைய தினம் விஜய் திருச்சியில் பிரச்சாரம் செய்தார்.

விஜய் பிரச்சாரம்
பிரச்சாரம் தொடர்பான அவரது வீடியோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வந்த நிலையில், அது எதிர்பாராத ஒரு சர்ச்சையில் முடிந்துள்ளது. அதுவும் அவர் அணிந்திருந்த ஒரு 'துண்டு' தான் இப்போது சர்ச்சையாக வெடித்துள்ளது. அதாவது திருச்சி கிழக்கு தொகுதியில் இன்று விஜய் பிரச்சாரம் செய்தார். மக்களின் கவனத்தை ஈர்க்கவும், அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவைப் பெறவும் அவர், நகரின் முக்கிய வழிபாட்டுத் தலங்களில் வழிபாடு நடத்தினார். முதலில் ஒரு அம்மன் கோயிலுக்கும், அதைத் தொடர்ந்து ஒரு பள்ளிவாசலுக்கும் சென்றார்.
இந்த இரண்டு இடங்களிலும் எந்தக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. விஜய்யைப் பார்க்க மக்கள் கோயிலைச் சுற்றிலும், பள்ளிவாசலிலும் அதிகம் இருந்தனர்.. மேலும், இந்த இரு இடங்களில் அவர் தனது கட்சிச் சின்னம் அல்லது கொடி பொறித்த எந்த அடையாளத்தையும் அணியவில்லை. ஒரு சாதாரண மனிதராகச் சென்று வழிபாடு நடத்திவிட்டுத் திரும்பினார்.
சர்ச்
இன்று விஜய் ஒரு சர்ச்சிற்கும் சென்றார். அங்கு தான் சர்ச்சை கிளம்பியது. அதாவது அவர் உள்ளே சென்றதும் சர்ச்சின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் அனைத்தும் திடீரென மூடப்பட்டன. அங்கே விஜய் முட்டி போட்டு நடந்து சென்று உருக்கமாகப் பிரார்த்தனை செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவில் கதவுகள், ஜன்னல்கள் மூடப்பட்டு இருந்தது தெளிவாகத் தெரிந்தது. ஆனால், இப்போது விஷயம் அது இல்லை.. முட்டி போட்டுப் பிரார்த்தனை செய்தபோது, விஜய்யின் கழுத்தில் அவரது கட்சியின் சின்னம் பொறித்த துண்டு பளிச்செனத் தெரிந்தது.
பாயும் நெட்டிசன்கள்
வழிபாட்டுத் தலங்களுக்குள் சாதாரணமாகச் சென்று வழிபாடு செய்வது வேறு, ஆனால் தேர்தல் நேரத்தில் கட்சி அடையாளத்துடன் செல்வது என்பது தேர்தல் நடத்தை விதிமீறல் என நெட்டிசன்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, வழிபாட்டுத் தலங்களுக்குள் கட்சிச் சின்னத்தைப் பயன்படுத்துவது விதிமீறலாகும். இதன் காரணமாகவே விஜய்யின் செயல் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
விஜய் கட்சித் துண்டுடன் சர்ச்சிற்குள் சென்றது, "தெரிந்தே செய்தாரா அல்லது கவனக்குறைவா?" என்ற கேள்வியையும் கிளப்பியுள்ளது. எப்படியாக இருந்தாலும் கட்சி துண்டு உடன் சர்ச் சென்ற விஜய் மீது தேர்தல் விதிமீறல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் நெட்டிசன்கள் சொல்லி வருகிறார்கள்.
சுந்தர் சி
முன்னதாக கடந்த வாரம் தான் மதுரையில் இதே போன்ற ஒரு சம்பவம் நடந்தது. மதுரை மத்திய தொகுதியில் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராகப் போட்டியிடும் சுந்தர் சி, எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள ஒரு சர்ச்சிற்குச் சென்றிருந்தார். அவரும் அதிமுக சின்னம் பொறித்த துண்டை அணிந்து கொண்டு, மக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக அவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வரவு வைப்பு! 2வது மாதமாக பணத்தை போட்டது தவெக அரசு! -
நாய்க்கு பிரியாணி.. மக்களை இழிவுபடுத்திப் பேசிய ராகவா லாரன்ஸ்! எழுந்த கண்டனம்.. பறந்த விளக்கம்! -
"கரண்ட் போனால் என்ன? விஜய்யை கேட்டா வந்துருமா?" என் வீட்டுல இருக்கு! வினோதமாக பேசிய மாஸ்டர் மகேந்திரன் -
எந்த முதல்வரும் செய்யாத மூவ்.. உள்ளாட்சித் துறையை முதல்வர் விஜய் தன்வசம் வைத்திருப்பது ஏன்? பின்னணி -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
தவெகவில் பனிப்போர்.. உழைத்தது நாங்க.. பவர் அவங்களுக்கா? மாவட்ட செயலாளர்கள் vs எம்எல்ஏக்கள் முட்டல்! -
அந்த குழந்தையே நீங்க தான் சார்.. தவெக கூட்டணி.. துரை வைகோ கொடுத்த ஹின்ட்












Click it and Unblock the Notifications