Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொஞ்சம் அப்டேட் ஆகுங்க விஜய்.. செங்கோட்டையன் காலத்தில் நடந்த சம்பவம் அது.. அன்பில் மகேஷ் பதிலடி!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: தமிழ்நாட்டில் மாணவர்கள் இடைநிற்றல் சதவிகிதம் 2017-18ல் செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த போதுதான் அதிகமாக இருந்தது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். விஜய் பழைய செய்திகளை வைத்து பேசுவதாக கூறிய அன்பில் மகேஷ், கொஞ்சம் அப்டேட் ஆக வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் பேசுகையில், திமுக ஒரு தீய சக்தி என்று ஆவேசமாக விமர்சித்தார். அதேபோல் அத்திகடவு - அவினாசி திட்டத்தை ஏன் விரிவுப்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பிய விஜய், தமிழ்நாட்டில் எதற்காக மாணவர்கள் இடைநிற்றல் அதிகரித்துள்ளது? என்றும் கேள்வி எழுப்பினார். இதற்கான புள்ளி விவரம் எதையும் விஜய் கொடுக்கவில்லை.

Vijay vs Anbil Mahesh

இந்த நிலையில் விஜய்யின் விமர்சனம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை பேசுகையில், திமுக ஆட்சியில் ஒரு குடும்பத்தில் ஒரு பயனாளியாவது இந்த அரசில் பயன்பெற்று இருப்பார் என்ற நிலைமையை உருவாக்கி தந்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலினின் கரத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வலுப்படுத்தி வருகிறார்.

தமிழ்நாடு முதல்வர் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வருவதாக நாம் சொல்லவில்லை. அதற்கான தரவுகளை மத்திய அரசு கொடுத்து வருகிறது. அதேபோல் ஆட்சி மாற்றம் ஏற்பட காரணம் இன்று பெண்களின் மனநிலை. இன்னொன்று ஆதி திராவிட நலக்குழு மனநிலை. இதனை நாம் தொன்று தொட்டு பார்த்து வருகிறோம்.

இன்றைய பெண்களின் மனநிலை மகளிர் உதவித்தொகை, விடியல் பயணம் மூலம் அனைத்து தாய்மார்களின் மனதிலும் முதல்வர் ஸ்டாலின் நின்றுவிட்டார். முதல்வர் ஸ்டாலின் சாதிய ரீதியிலான பாடுபாடுகளை தகர்த்தெறியும் வண்ணம் காலனி என்ற சொல்ல இருக்கக் கூடாது என்று அரசாணை வெளியிட்டார். அப்படிபட்ட ஆட்சியை மீண்டும் நாம் அமைத்திட அயராது பாடுபடுவோம்.

வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து யார், எதற்காக நீக்கப்பட்டார்கள் என்ற விவரங்களை சேகரித்து அவர்களை வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஈரோட்டில் விஜய் பேசும் போர்து, தமிழ்நாட்டில் பள்ளி இடைநிற்றல் அதிகமாக உள்ளது என்றார். அது எனக்கு வருத்தம் அளிக்கிறது. அதிமுக ஆட்சி காலத்தில் 2017-18ஆம் ஆண்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் இருந்த காலத்தில் இதன் சதவிகிதம் 16ஆக இருந்தது.

தற்போது அந்த சதவிகித 7.7ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வந்த செய்தி. அப்போதே அதற்கான விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. பழைய தகவல்களை வைத்துக் கொண்டு தவெக தலைவர் விஜய் திமுக அரசை குறை கூறி வருகிறார். அதனால் விஜய் தன்னை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+