தூத்துக்குடி அருகே.. தோண்ட தோண்ட பிரமிப்பு.. ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழி.. தமிழ் பிராமி எழுத்து
தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தமிழக தொல்லியல் துறை சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி, ஆதிச்சநல்லூர், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள சிவகளையில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணியும், கடலோரப்பகுதியான, கொற்கையில் முதல் கட்ட அகழாய்வு பணியும் துவங்கியது.
இந்த பணியானது தொடர்ந்து 4 மாத காலமாக நடைபெற்று வருகிறது.

40 பணியாளர்கள்
அகழாய்வு இயக்குநர் பிரபாகரன் தலைமையில், சிவகளை அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வு பணிக்காக 15க்கும் மேற்பட்ட குழிகள் அமைக்கப்பட்டு 40க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிவகளை அகழாய்வு பணியை பொறுத்தவரை 40க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது.

சிவகளை பகுதியில் ஆய்வு
இந்தநிலையில் சிவகளை பரம்பு பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த முதுமக்கள் தாழிகளில் 5 முதுமக்கள் தாழிகள் மூடியுடன் உள்ளது. 10 முதுமக்கள் தாழிகள் பெரிய அளவில் பிரம்மாண்டமாக உள்ளது.

தமிழ் பிராமி எழுத்துக்கள்
ஒவ்வொரு முதுமக்கள் தாழிகளும் 2 அடி முதல் 4 அடி வரை உயரமாக காணப்படுகிறது. மேலும் பானைகளும், பானை ஓடுகளும், தமிழ் பிராமி எழுத்துக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த திருப்பத்தின் காரணமாக ஆய்வாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

வாழ்விடப் பகுதிகள் குறித்து ஆய்வு
சிவகளை அகழாய்வு பணியில் தாமிரபரணிக்கரை நாகரீகத்தை கண்டறிவதற்காக முதல் முறையாக வாழ்விடப்பகுதிகளையும் ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் அகழாய்வு அதிகாரிகளும், ஆர்வலர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

முதுமக்கள் தாழி என்றால் என்ன?
முந்தைய காலத்தில் இறந்தவர்களின் உடல்களை வைத்து மண்ணில் புதைக்கப் பயன்படுத்தப்பட்ட புதைகலன்கள் முதுமக்கள் தாழிகள் எனப்படும். 'தாழியுடன் கவிப்போர்' என மணிமேகலை இவ்வழக்கம் குறித்து சுட்டிக் காட்டுகிறது. முதுமக்கள் தாழி அரை அடி முதல் ஏழு அடி வரையிலான பல்வேறு அளவுகளில் தமிழகத்தின் பல பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆற்றுச் சமவெளிப்பகுதிகளில் இம்முறை பரவாலாக பின்பற்றப்பட்டு வந்ததை தொல்லியல் ஆய்வுகள் உணர்த்துகின்றன.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications