திரும்பும் தமிழர் வரலாறு! சிவகளையிலும் கண்டெடுக்கப்பட்ட தங்க பொருள்! தோண்ட தோண்ட வெளிவரும் உண்மைகள்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தையடுத்துள்ள சிவகளையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் தங்கத்திலான பொருள் கிடைத்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த பகுதியில் ஏற்கெனவே முதுமக்கள் தாழி, இரும்பு, வெண்கலம் மற்றும் சங்கு பொருட்கள் கிடைக்கப்பெற்ற நிலையில் தற்போது முதல்முறையாக தங்கத்திலான பொருள் கிடைத்திருக்கிறது.
பராக்கிரமபாண்டி திரட்டில் வாழ்விடப்பகுதிகளை கண்டறிவதற்காக நடந்து வரும் அகழாய்வு பணியில் இந்த தங்கம் கிடைத்திருக்கிறது.

வரலாறு
உலகின் மிக தொன்மையான நாகரிகமாக சீனாவின் மஞ்சள் நதி நாகரிகம், கிரேக்கம், எகிப்து மற்றும் சிந்து சமவெளி நாகரிகள் மட்டுமே இருந்ததாக நம்பப்பட்டு வந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டின் கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கிடைக்க பெற்ற பொருட்கள் மேற்குறிப்பிட்ட தொன்மையான நாகரிகங்கள் பட்டியலில் தமிழர் நாகரிகம்தான் முதன்மையானது என உறுதி செய்துள்ளது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் திருவைக்குண்டம் பகுதியையொட்டியுள்ள ஆதிச்சநல்லூர் எனும் பகுதியில் கிடைக்கப்பெற்றுள்ள பொருட்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஆதிச்சநல்லூர்
இந்த பகுதியில் 1876ல் அகழாய்வு நடத்தப்பட்டது. இதனையடுத்து, 2004ம் ஆண்டு இப்பகுதியில் நடத்தப்பட்ட தொல்லியல் துறை ஆய்வில் சுமார் 169 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனையடுத்து இப்பகுதியின் முக்கியத்துவம் குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இதனை பாதுகாக்கப்பட்ட பகுதியாக நீதிமன்றம் அறிவித்தது. இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் சுமார் 3,000 முதல் 2,500 ஆண்டுகள் வரை பழமையானதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அதேபோல சங்க காலம் தொட்டு ஆங்கிலேயர்கள் காலத்திலும் இங்கு மக்கள் வாழ்ந்து வந்ததற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அகழ்வாய்வில் நாணயங்கள்
இதனையடுத்து ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டதில் கடந்த ஏப்ரல் மாதம் இப்பகுதியிலிருந்து இரண்டு பழங்கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த நாணயத்தில் ஒரு தொட்டியில் கடல் ஆமைகளின் உருவம், மரம், யானை, மீனின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. "இந்த நாணயங்கள், ஆதிச்சநல்லூரில் சங்கக் காலத்தில் மக்கள் வாழ்ந்ததையும் கடல் சார் வாணிபம் நடந்ததையும் உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது" என மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல கண்காணிப்பாளர் முனைவர் அருண்ராஜ் கூறியிருந்தார். இதனையடுத்து இந்த பகுதியில் தங்க கிரீடம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சிவகளை
இதன் தொடர்ச்சியாக ஆதிச்சநல்லூரிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள சிவகளையில் பராக்கிரமபாண்டி திரட்டில் வாழ்விடப்பகுதிகளை கண்டறிவதற்காக மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் தங்கத்திலான பொருள் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் தொல்லியல் துறை இயக்குநர் பிரபாகரன் தலைமையில் 3வது கட்டமாக ஆய்வுகள் நடந்து வருகிறது. இதில் சுமார் 40 பேர் பணியாற்றி வருகின்றனர்.

தங்கம்
இதுவரையில் இந்த பகுதியில் சுமார் 40 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒரேயொரு குழியில் மட்டுமே சுமார் 16 தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. இது மட்டுமல்லாது, பழங்கால கல்வட்டங்கள், மண்பாண்ட பொருட்கள், இரும்பு, வெண்கலம் மற்றும் சங்கு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அதிசயமாக நெல் மணிகள் போன்றும் சில பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக தற்போது முதன் முறையாக தங்கத்திலான பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications