வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக Ex அமைச்சர் மகன்! தூள் பறக்கும் தூத்துக்குடி அரசியல்!
தூத்துக்குடி: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தனது மகனை தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் களமிறக்கியுள்ளார்.
அதிமுக அதிக இடங்களை கைப்பற்றும்பட்சத்தில் மகனை தூத்துக்குடி மேயராக்க மாஜி அமைச்சர் திட்டமிட்டுள்ளாராம்.
இதனிடையே திமுக தரப்பில் 59-வது வார்டு கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், இப்போதே தனது மகனின் வெற்றி உறுதி என நம்புகிறாராம் சண்முகநாதன்.

முன்னாள் அமைச்சர்
முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன், தனது மகனும் தொழிலதிபருமான எஸ்.பி.எஸ்.ராஜாவை தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் 59-வது வார்டில் களமிறக்கியிருக்கிறார். பல ஆண்டுகளாக தூத்துக்குடி மாகராட்சி பெண்கள் ஒதுக்கீட்டில் இருந்த வந்த நிலையில், இப்போது பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் உட்கட்சி பனிப்போர் காரணமாக திமுக ஒரு வேளை குறைந்த இடங்களில் வெற்றிபெற்றால் மகனை மேயராக்கி அழகு பார்ப்பது என தீர்மானித்துவிட்டார் அதிமுக மாஜி அமைச்சர் சண்முகநாதன்.

59-வது வார்டு
தூத்துக்குடி மாநகராட்சியின் 59-வது வார்டில் ஸ்பிக் நகர், ஹார்பர் கன்ஸ்ட்ரக்ஷன் சாலை, திருச்செந்தூர் பிரதான சாலை, சண்முகபுரம், சூசை நகர் உள்ளிட்ட பகுதிகள் வருகின்றன. இப்பகுதிகளில் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கி மகனின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்து வைத்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன். இதுமட்டுமல்லாமல் சண்முகநாதனின் தாராளம் கட்சியினரை அங்கு பம்பரமாக சுழல வைத்துள்ளது.

இரண்டு அமைச்சர்கள்
தூத்துக்குடி மாவட்டத்திற்கு அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் என இரண்டு அமைச்சர்கள் உள்ள நிலையில் அதிமுகவுக்கு கடுமையான போட்டியை கொடுத்து வருகிறது திமுக. மேலும், கனிமொழி எம்.பி.யின் தொகுதி என்பதால் தூத்துக்குடியில் திமுக வெற்றிபெறப் போகும் மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

முதல்முறை
அதிமுக சார்பில் 59-வது வார்டில் போட்டியிடும் எஸ்.பி.எஸ்.ராஜா, முதல்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். அப்பா அமைச்சர், மாவட்டச் செயலாளர் என பல பொறுப்புகளில் இருந்திருந்தாலும் ராஜாவுக்கு தேர்தல் களம் என்பது புதிதான ஒன்றாகும்.
-
ஜெயித்தது தூத்துக்குடியில், நன்றி சொல்வது திருச்செந்தூரிலா.. ஸ்ரீநாத்தை கிண்டல் செய்யும் கட்சிகள் -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. டீக்கடையில் பயங்கரம்! என்ன நடந்தது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications