தப்பிக்க பார்க்கும் நேரு..ராமராஜ்ஜியம் என செல்லூர் ராஜு சொன்னது தப்பில்லை..சொல்கிறார் கடம்பூர் ராஜு
தூத்துக்குடி : தமிழகத்தில் ராமராஜ்ஜியம் போல் ஒரு ஆட்சியை நாங்கள் கொண்டு வருவோம் என செல்லூர் ராஜூ சொன்னது தவறில்லை எனவும், நல்ல ஆட்சி நடக்கிறது என்றால் அதனை ராம ராஜ்ஜியம் என கூறுவார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.
Recommended Video
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலை, இனம்மணியாச்சி, கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் அதிமுக சார்பில் நீர் ,மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில்,முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர்,மோர் உள்ளிட்டவைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.

முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ
பின்னர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், " தமிழ்நாடு சரித்திரத்தில் காணாத அளவுக்கு 150 சதவீதம் சொத்து வரியை உயர்த்தி7 உள்ளனர். அதற்குரிய கட்டணம் செலுத்தபோகும் போது தான், சொத்தை விற்று சொத்து வரி செலுத்த வேண்டிய துர்பாக்கிய நிலை உள்ளது. மக்கள் கொதித்து போய் உள்ளனர். மக்கள் மீது சுமத்தப்பட்ட சொத்துவரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என நாளை அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

அமைச்சர் கே.என்.நேரு
மக்கள் மன்றத்தில் மட்டுமல்லாது, சட்டமன்றத்தில் இந்த பிரச்சினைக்கு முடிவுகட்டும் வகையில் அதிமுக சிறப்பாக செயல்பட்டு, ஆளும்கட்சிக்கு தேவையான அழுத்தத்தை கொடுத்து, அதனை திரும்ப பெறுகிற வகையில் என்னென்ன செய்ய வேண்டுமோ அதனை செய்வோம். சொத்து வரி உயர்வு தொடர்பாக மத்திய அரசின் மீது பழிபோட்டு அமைச்சர் நேரு தப்பிக்க பார்க்கிறார். மத்திய அரசு எங்களது நிதி வர வேண்டுமென்றால், நீங்கள் இவ்வளவு வருவாய் காட்ட வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால், சொத்து வரியை 15 சதவீதம் உயர்த்த வேண்டும் என மத்திய அரசு ஆதாரப்பூர்வமாக எதையும் கொடுத்துள்ளதா என அமைச்சரை சட்டமன்றத்தில் தெரிவிக்க சொல்லுங்கள்.

சொத்து வரி
இவ்வளவு வரி விதிக்க வேண்டும் என்று கூற மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. அப்படியே இருந்தாலும், அவர்கள் மாநில சுயாட்சியில் தலையிட மாட்டார்கள். அப்படி அவர்கள் தலையிட்டிருந்தால், அதனை பெரிய பிரச்சினையாக திமுக அரசு கொண்டு வந்திருக்கும். இதற்கு மத்திய அரசு தகுந்த பதில் அளிக்கும். ஒரு நல்ல ஆட்சி நடக்கிறது என்றால் அதனை ராம ராஜ்ஜியம் என கூறுவார்கள். இது ஒரு பழமொழி. இதில் மதத்துக்கும், ஆன்மீகத்துக்கு வழியில்லை. அப்படிப்பட்ட ஆட்சியை நாங்கள் கொண்டு வருவோம் என செல்லூர் ராஜூ சொன்னது தப்பில்லை. நாங்கள் மீண்டும் வருவோம்.

எது சிறந்த ஆட்சி ?
5 பவுன் வரை நகை அடகு வைத்திருந்தால், அந்த நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தனர். இதில் என்ன தகுதி பார்க்க வேண்டியது உள்ளது. தவறு நடந்திருந்தால், அவற்றை மட்டும் தவிர்த்துவிட்டு மற்ற அனைவருக்கும் வழங்கியிருக்கலாம். தற்போது தொழில் வரி, சொத்து வரி, அதற்கு அடுத்தபடியாக மின்சாரம் கட்டண உயர்வு, பேருந்து கட்டண உயர்வு என இன்னும் உள்ளது. இது தான் இந்த அரசு வைத்துள்ள பொருளாதார நிபுணர்களின் வேலை. நிழலின் அருமை வெயிலில் என்பதை போல், எந்த ஆட்சி சிறந்த ஆட்சி என்பதை மக்கள் ஒப்பிட்டு பார்ப்பார்கள்." என்றார்.












Click it and Unblock the Notifications