தூத்துக்குடி மீன் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா வாயு கசிவு! 21 பெண்கள் மயக்கம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மீன் பதன ஆலையில் அமோனியா கேஸ் கசிவால் 21 பெண்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினர். இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் பகுதியில் தனியார் மீன்பதப்படுத்தும் ஆலை உள்ளது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கு மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் மீன்கள் பதப்படுத்தப்பட்டு பிறகு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.

இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதி, வெளிமாநிலங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணிக்கு இந்த ஆலையில் மின் விபத்து ஏற்பட்டது.
அமோனியா கேஸ் சிலிண்டர் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டது. இதையடுத்து நிறுவனம் முழுவதும் அமோனியா வாயு பரவியது. இதனால் அங்கு பணியில் இருந்த கும்பகோணம் பகுதியை சேர்ந்த 5 பெண்கள், ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த 16 பெண்கள் என மொத்தம் 21 பெண்களுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு கண் எரிச்சலை கொடுத்தது.
பின்னர் அவர்கள் ஒவ்வொருவராக மயங்கி விழுந்தனர். இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட 21 பெண்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக புதியம்புத்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதே போல் கடந்த 2014 ஆம் ஆண்டும் தூத்துக்குடியில் உள்ள கடல் வாழ் உயிரினங்களை பதப்படுத்தும் ஆலையில் வாயு கசிவு ஏற்பட்டு 54 பேர் மயங்கி விழுந்து தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications