உதயநிதியை அமைச்சராக்கணும்னா ஆக்குங்க.. ஆனா அதுக்காக அவர் படத்தைப் பாக்க சொல்லாதீங்க! பாஜக அண்ணாமலை
தூத்துக்குடி: பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அண்ணாமலை, திமுக அரசைக் கடுமையாகச் சாடினார். திமுக அமைச்சர்கள் வசூல் செய்வதிலேயே குறியாக உள்ளதாகவும் விமர்சித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நாலாட்டின்புத்தூரில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக சார்பில் மாற்றத்திற்கான மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அண்ணாமலை, திமுக அரசைக் கடுமையாக விமர்சித்தார். மேலும், முதல்வர் ஸ்டாலின் தமிழக வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்றும் அவர் சாடினார்.

அண்ணாமலை
இந்த மாநாட்டில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "அடுத்து நாடாளுமன்றத் தேர்தல் வர 17 மாதங்கள் உள்ளது.. இதில் நிச்சயம் 400 இடங்களில் வென்று மீண்டும் மோடி பிரதமராக வருவார்.. தமிழக அரசின் செயல்பாட்டில் பிரச்சினை இருக்கிறது. இங்குள்ள அமைச்சர்கள் டார்க்கெட் வைத்து கல்லா கட்டுவதில் தான் ஆர்வமாக உள்ளனர். இதன் காரணமாகத் தமிழகத்தைச் சாராயம் ஓடும் மாநிலமாக மாற்றியுள்ளனர். டாஸ்மாக்கில் மட்டும் 38 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 4 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் அதிகரித்து வருகிறது.

வெள்ளைக்கார அரசு
லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் செய்ய முடியாத நிலை தான் இப்போது தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது. திமுக அமைச்சர்கள் பேசுவதைப் பார்க்கும் போது அங்கு சமூக நீதியே இல்லை என்பது மிகத் தெளிவாகவே தெரிகிறது. பால் விலை, மின்சார கட்டணம் உயர்த்தியதால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகளிர் இலவச பேருந்தில் பயணம் செய்தால் ஓசி பயணம் செய்வதாக அமைச்சர் ஒருவர் கூறுகிறார். வெள்ளைக்கார அரசு போலவே திமுக அரசு செயல்பட்டு வருகிறது. நெல் கொள்முதல் செய்யக் கூட விவசாயிகளிடம் கமிஷன் வசூல் செய்கின்றனர். கப்பம் கட்டியே தீர வண்டியைச் சூழ்நிலையில் தமிழக விவசாயிகள் உள்ளனர்.

பெண்களை மதிக்காத அரசு
பாலுக்கு கூட ஜிஎஸ்டி விதித்துள்ளதாக ஒரு வாய்கோளறு அமைச்சர் கூறுகிறார்.. மின்கட்டணம், சொத்து வரி உயர்வுக்கும் கூட மத்திய அரசு தான் காரணம் என்று முதுகெலும்பு இல்லாத தமிழக அரசு கூறுகிறது.. வடிவேலு கிணற்றைக் காணும் என்பது போல அமைக்கப்பட்ட மரப்பாலாம் சில நாட்களில் காணோம்.. இதற்காகச் செலவான 1.20 கோடி என்னாச்சு என தெரியவில்லை. அமைச்சர்களின் பேச்சுகளில் இருந்து மகளிரை காப்பாற்றவே தனித்துறையை உருவாக்க வேண்டும் என்பது போலவே நிலைமை உள்ளது. பெண்களை மதிக்கத் தெரியாத கட்சியாக திமுக மாறி உள்ளது.

படம் பார்க்க சொல்லாதீங்க
இப்போதுள்ள முதல்வருக்கு மக்கள் மீது அக்கறை இல்லை. திரைப்படங்களுக்கு ரிவ்யூ செய்யும் வேலையைத் தான் முதல்வர் செய்து வருகிறார். மெட்ராஸ் ஐ வந்து பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் முதல்வர் ஸ்டாலின் கழகத்தலைவன் திரைப்படம் குறித்துக் கேட்கிறார். உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்றால் ஆக்கிவிடுங்கள்.. அதற்காக அவர் நடித்த படங்களை எல்லாம் பார்க்க சொல்லாதீங்க..

சொகுசு மெத்தையில் பயணம்
சொகுசு மொத்தையில் ரயிலில் தென்காசிக்குச் சென்றுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. எனவே, அவருக்கு எப்படி சாமானிய மக்களின் பிரச்சினை குறித்துத் தெரியும். எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் சிறப்பாக இருக்கும் சிதம்பரம் கோவிலுக்குத் தமிழக அறநிலையத்துறை திடீரென ஆய்வுக்குப் போவது ஏன்? அங்கன்வாடி, பள்ளி குழந்தைகளுக்கு அழுகிய மூட்டை வழங்குவதில் சாதனை படைத்துள்ளார் அமைச்சர் கீதா ஜீவன். அவருக்கு அழுகிய முட்டை அமைச்சர் என்றே பெயர் வழங்கலாம்.

தமிழுக்கு எதுவும் செய்யவில்லை
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி பிரச்சினை குறித்து ஒரு நாளும் கனிமொழி எம்பி நாடாளுமன்றத்தில் பேசியது இல்லை.. சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் கனிமொழி எம்பி குற்றச்சாட்டுக் கூறியுள்ளார்.. காங்கிரஸ் ஆட்சியில் தான் சமஸ்கிருதம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.. தமிழுக்கென திமுக பல்கலைக்கழகம் எதையும் ஆரம்பிக்கவில்லை. எம்.ஜி.ஆர் காலத்தில் மட்டுமே தமிழுக்கு எனத் தனியாக ஒரே ஒரு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. கூடுதலாகத் தமிழ் பல்கலைக்கழகத்தைத் தமிழக அரசு தொடங்கினால் மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்றுத் தருவது எங்கள் பொறுப்பு. மகாகவி பாரதியாருக்கும் திமுக அரசு எதுவும் செய்யவில்லை..

திரைத்துறை
திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை எதையும் நிறைவேற்றவில்லை.. அண்ணாமலையை யார் அதிகமாகத் திட்டுகிறார்களோ அவருக்கு திமுக விருது என்றேத் திமுக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் இன்றைக்குத் திரைப்படம் எடுப்பது, நடிப்பது எல்லாம் அவர்கள் தான்.. பெரிய நடிகர்களின் திரைப்படங்களைக் கூட வெளியிட முடியாத நிலைதான் இருக்கிறது. அதை வரும் பொங்கலுக்குப் பார்க்கத்தான் போகிறார்கள்.. மக்களை நேசிக்கும் அடிப்படைத் தகுதி அரசியலுக்கு இருக்க வேண்டும்.. திமுகவை மக்களை ஏற்கவில்லை... வரும் தேர்தலில் இது தெரியும். இது சாமானிய மனிதர்களுக்கான காலம்.. அடுத்த மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து பாஜக அதிக இடங்களில் வெல்லும். அதற்கான பணிகளை நாம் தொடங்க வேண்டும்" என்றார்.
-
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
லதா ரஜினிகாந்த் 'மக்கள் மேடை' இயக்கத்தை நேற்றுதான் தொடங்கினாரா? தீயாகப் பரவிய தகவல்.. உண்மை என்ன? -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
இசட் பிரிவு பாதுகாப்பு விவகாரம்.. கட்சி தொடங்கிய கையோடு மத்திய அரசுக்கு அண்ணாமலை கடிதம்? -
அண்ணாமலையை நம்பி ஏமாறாதீங்க! ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வேண்டாம்! நயினார் அட்வைஸ் -
அண்ணாமலைக்கும் அடைக்கலம் தரும் திருமா.. வாழ்த்து சொன்ன கையோடு அடுத்து சொன்ன மேட்டரை பாருங்க












Click it and Unblock the Notifications