ஒரே நொடி.. காணாமல் போன பைக்.. மின்னல் வேகத்தில் நடந்த விபத்து.. உயிர் தப்பிய தூத்துக்குடி இளைஞர்!
தூத்துக்குடி: தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சு என்று சொல்வதற்கு இணங்க தூத்துக்குடியில் ஒரு சவம்பம் அரங்கேறியுள்ளது. சாலையோரம் உள்ள டீக்கடையில் இளைஞர்கள் சிலர் டீ குடித்து கொண்டிருந்த நிலையில் ஓரே ஒரு இளைஞர் மட்டும் பைக்கை சாலையில் நிறுத்திவிட்டு அதில் அமர்ந்து இருந்தார். அப்போது மின்னல் வேகத்தில் வந்த கார் ஒன்று பைக் மீது மோதி சென்றது.
இதில் நல் வாய்ப்பாக இளைஞருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக பரவி வருகிறது. என்னடா இங்க இருந்த வண்டியை காணோம் என்று சொல்லும் அளவுக்கு ஒரு நொடியில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

பைக்கை சாலையில் நிறுத்திய இளைஞர்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே இளைஞர்கள் சிலர் சாலை ஓரம் உள்ள டீக்கடை ஒன்றில் டீ குடித்து கொண்டிருந்தனர். சில இளைஞர்கள் டீக்கடை முன்பு இருந்த சேர்களில் அமர்ந்து இருந்தனர். ஆனால் ஒரே ஒரு இளைஞர் மட்டும் சாலையில் இருசக்கர வாகனத்தை நிறுத்தியபடி அதில் அமர்ந்து இருந்து செல்போன் பார்த்துக்கொண்டிருந்தார்.
சாலையில் வெள்ளைக்கோடுக்கு வெளியே பைக்கை நிறுத்தியது மட்டுமில்லாமல், அக்கம்பக்கம் என்ன நடக்கிறது என்பதை கூட பார்க்காமல் செல்போனை நோண்டியபடியே இருந்தார். அப்போது அந்த சாலையில் மின்னல் வேகத்தில் வந்த கார் ஒன்று அந்த இளைஞர் நிறுத்தியிருந்த பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. நல் வாய்ப்பாக இளைஞர் மீது கார் மோதவில்லை.
டிரெண்ட் ஆகும் வீடியோ
இதனால் அதிர்ஷ்டவசமாக இளைஞர் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினார். நூழிலையில் இளைஞர் உயிர் தப்பினார். எனினும் பைக் தூக்கி வீசப்பட்டதில் டீக்கடை முன்பு அமர்ந்து இருந்த நபர் மீது காயமடைந்தார். கார் மோதிய வேகத்தில் சேரில் அமர்ந்து டீ குடித்துக்கொண்டிருந்த நபர் மீது வேகமாக மோதியது. இதில் அவர் கீழே விழுந்து காயமடைந்தார்.
ஒரே நொடியில் இந்த சம்பவம் அரங்கேறியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தினால் அங்கிருந்த இளைஞர்கள் திகைத்து போயினர். குறிப்பாக பைக்கில் அமர்ந்து இந்த இளைஞர், என்னடா இங்கே இருந்த பைக்கை காணோம் என்பது போல அப்படியே ஒரு நொடி திகைத்து போனார். தற்போது இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி டிரெண்ட் ஆகி வருகிறது.
நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்
நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவை டிரெண்ட் செய்து வருகிறார்கள். சில நெட்டிசன்கள் கார் இவ்வளவு வேகத்தில் ஓட்டியது மட்டுமின்றி நிற்காமல் சென்று இருக்கிறாரா? அப்படி நிற்காமல் சென்றிருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இன்னும் சிலரோ, "அந்த இளைஞர் அதிர்ஷ்டக்காரர்தான் போல.. தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சு என்பது போல நல்வாய்ப்பாக பைக்கோடு போனது" என பதிவிட்டுள்ளனர்.
சில நெட்டிசன்ஸ், "கிராமங்களில் இது போன்று பொறுப்பு இல்லாமல் பைக்குகளை நடு ரோட்டில் நிறுத்துவது மட்டுமில்லாமல் அக்கம் பக்கம் என்ன நடக்கிறது என்பதை கூட கவனிக்காமல் செல்போனில் மூழ்கிவிடுகிறார்கள். எதற்காக நடு ரோட்டில் பைக்கை நிறுத்திவிட்டு நிற்க வேண்டும் எனவும், காரை ஓட்டிச்சென்றவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் வலியுறுத்தியுள்ளனர்.




Click it and Unblock the Notifications
