Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எதையும் மறைக்கவில்லை..என்ஐஏவுடன் இணைந்தே விசாரணை நடைபெற்றது..தங்கம் தென்னரசு விளக்கம்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: கார் வெடிப்பு சம்பவம் அக்டோபர் 23ஆம் தேதி நிகழ்ந்தது, அது முதல் வழக்கு என்ஐஏ வசம் ஒப்படைக்கப்படும் வரை தமிழக காவல்துறையுடன் இணைந்தேதான் விசாரணை நடைபெற்றுள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். கார் வெடிப்பு சம்பவம் குறித்து என்ஐஏவிற்கோ, மத்திய உளவுத்துறைக்கோ தகவல் தெரிவிக்காமலோ இல்லை என்றும் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

கோவை உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கடந்த 23ம் தேதி மாருதி கார் வெடித்து வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பயங்கரவாதி சதியாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

இதனையடுத்து டிஜிபி சைலேந்திரபாபு, ஏடிஜிபி தாமரைக்கண்ணன் உள்ளிட்ட போலீஸ் உயரதிகாரிகள் கோவையில் முகாமிட்டு சம்பவ இடத்தை பார்வையிட்டு பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டனர். மேலும் தடயவியல் துறை அதிகாரிகள் காரில் இருந்த தடயங்களை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். இதில் கார் வெடிப்பில் பலியானது கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் என்ற பழைய துணி வியாபாரி என்பது தெரியவந்தது. மேலும் காரில் இரும்பு ஆணிகள், கோலி குண்டுகள் சிதறி கிடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் ஜமேஷா முபின் வீட்டில் சோதனை நடத்திய போது அங்கே வெடி பொருட்கள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் இருந்தன.

தங்கம் தென்னரசு

தங்கம் தென்னரசு

கார் வெடிப்பு சம்பவம் என்ஐஏ விசாரணைகக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக அரசு காவல்துறையுடன் இணைந்து என்ஐஏ அதிகாரிகளும் விசாரணை நடத்தியுள்ளனர். இதுபோன்ற கார் வெடிப்பு சம்பவம் நடந்தால் அதை முதலில் தமிழக காவல்துறை எப்ஐஆர் போட்டு விசாரணை நடத்த வேண்டும். அதுதான் கோவை சம்பவத்திலும் நடந்தது.

இணைந்தே விசாரணை

இணைந்தே விசாரணை

பயங்கரவாத தொடர்பு இருக்கிறது. வேறு மாநிலம், வேறு நாட்டுடன் பயங்கரவாத தொடர்பு இருந்தால் என்ஐஏ தங்களாகவே அந்த வழக்கை நேரடியாக விசாரிக்க முடியும். கடந்த 25ஆம் தேதி முதல் என்ஐஏ அதிகாரிகளும் விசாரணையில் இணைந்திருந்தனர்.

 தமிழக அரசு பரிந்துரை

தமிழக அரசு பரிந்துரை

26ஆம் தேதியன்று தேசிய பாதுகாப்பு முகமை, மாநில காவல்துறை, மத்திய உளவுத்துறையும் இணைந்துதான் விசாரணை மேற்கொண்டனர். வழக்கின் தீவிர தன்மையை உணர்ந்துதான் தமிழக அரசு என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை செய்தது. முதல்வர் ஸ்டாலின் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டதை அடுத்து மத்திய அரசும் என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

 ஜமேசா முபின்

ஜமேசா முபின்

தேசிய புலனாய்வு முகமை எடுத்துக்கொள்வது வரை அனைத்து விபரங்களும் தமிழக காவல்துறையினால் என்ஐஏவிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடி விபத்தில் இறந்த ஜமேஷா முபின் கடந்த 2019ஆம் ஆண்டு என்ஐஏவினால் விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர். என்ன காரணத்திற்காக அவர் என்ஐஏவினால் விடுவிக்கப்பட்டவர் என்பது தெரியாது. அப்போது புலனாய்வு விசாரணையில் இருந்த அதிகாரிக்களுக்குத்தான் தெரியம்.

மத்திய உளவுத்துறை

மத்திய உளவுத்துறை

கார் வெடிப்பு சம்பவம் அக்டோபர் 23ஆம் தேதி நிகழ்ந்தது, அது முதல் வழக்கு என்ஐஏ வசம் ஒப்படைக்கப்படும் வரை தமிழக காவல்துறையுடன் இணைந்தேதான் விசாரணை நடைபெற்றுள்ளது. கார் வெடிப்பு சம்பவம் குறித்து என்ஐஏவிற்கோ, மத்திய உளவுத்துறைக்கோ தகவல் தெரிவிக்காமலோ இல்லை. அவர்களும் நம்முடனேயே பயணித்தனர். அவர்களை விட்டு விட்டு தமிழக அரசு காவல்துறை மட்டுமே விசாரணை நடத்தியது போலவும், தாமதமாக என்ஐஏவிற்கு தகவல் கூறியது போலவும் ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கியது சரியல்ல.

ஸ்டாலின் நேரடி கண்காணிப்பு

ஸ்டாலின் நேரடி கண்காணிப்பு

முதல்வர் ஸ்டாலினின் நேரடி கண்காணிப்பில் தினம் தினம் அவரது அறிவுறுத்தலின் படி விசாரணை நடைபெற்றது.
தீபாவளி நாளில் தமிழ்நாடு முழுவதும் மக்களிடத்தில் எந்தவிதமான பதற்றமான நிலை ஏற்பட்டு விடாமல் இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். அதன்படியே மக்கள் எந்தவித அச்சமும் இன்றி தீபாவளி பண்டிகை கொண்டாடினர் என்றும் தங்கம் தென்னரசு கூறினார். தமிழக காவல்துறை மிகவும் சிறப்பாக சீரிய முறையில் இந்த வழக்கை கையாண்டனர் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+