அதிமுக - பாஜக ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்..இருவராலும் தமிழகத்திற்கு அவமானம் - விளாசிய கனிமொழி எம்பி

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி : அதிமுகவும் பாஜகவும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் எனவும், தமிழகத்திற்கு அவமானத்தையும் கேடையும் விளைவிக்க கூடிய இவர்கள் இருவராலும் மக்களுக்கு நன்மை எதுவும் நடக்கவில்லை என கோவில்பட்டியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார்.

Recommended Video

    அதிமுக - பாஜக ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்..இருவராலும் தமிழகத்திற்கு அவமானம் - விளாசிய கனிமொழி எம்பி

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.

    இதற்காக தமிழகம் முழுவதும் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் களம் சூடுபிடித்துள்ளயதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.

    கனிமொழி பிரச்சாரம்

    கனிமொழி பிரச்சாரம்

    வேட்பாளர்களுக்கு ஆதரவாக முன்னணி கட்சிகளின் தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பழைய பேருந்து நிலைய பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் 36 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மாநில மகளிர் அணி செயலாளருமாகிய கனிமொழி கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

    எம்.எல்.ஏ.வை காணவில்லை

    எம்.எல்.ஏ.வை காணவில்லை

    பிரச்சார கூட்டத்தில் பேசிய கனிமொழி, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் அனைத்து தொகுதிகளை கைப்பற்றி விட்டோம். ஆனால் கோவில்பட்டியை கோட்டை விட்டுவிட்டோம், அதனால் ஒவ்வொரு நாளும் அந்த பாதிப்பை நாம் உணர்ந்து கொண்டு இருக்கின்றோம், ஏனென்றால் இங்கு உள்ள சட்டமன்ற உறுப்பினர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை என்றார்.

    மதத்தின் பெயரால் கலவரம்

    மதத்தின் பெயரால் கலவரம்

    அதிமுக ஆட்சியில் இருந்தாலும் மக்களுடைய கோரிக்கைகள் பிரச்சினைகளை நிறைவேற்றியது இல்லை. முதலமைச்சர் தளபதி அவர்கள் தேர்தலுக்கு முன்பாகவே மக்களை சந்தித்து என்னென்ன வாக்குறுதிகளை கொடுத்தார்களோ அதெல்லாம் நிறைவேற்றி வருகிறார்கள் அதுதான் திமுக ஆட்சி. மதத்தின் பெயரால் அடக்குமுறையின் பெயரால் கர்நாடகாவில் கலவரங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது.எனவே தமிழகத்தில் பாஜக காலூன்ற வாய்ப்பளித்துவிடக்கூடாது.

    நாணயத்தின் இரு பக்கங்கள்

    நாணயத்தின் இரு பக்கங்கள்

    நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தான் பிஜேபியும் அதிமுகவும் , தமிழ்நாட்டுக்கு அவமானத்தைத் தேடித் தந்தவர்கள், கேடை விளைவிப்பவர்கள் என்பதை புரிந்து கொண்டு இந்த தேர்தலில் நீங்கள் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும். உங்களுக்கும் அரசாங்கத்திற்கும் பாலமாக இருக்கக்கூடிய வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றார் அவர். தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் கனிமொழி எம்.பி. திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பளித்தனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+