ஆண் நண்பர்களுடன் 17 வயதில் உல்லாசம்..கண்டித்த தாய்..பக்கா ஸ்கெட்ச் போட்டு கழுத்தை அறுத்த “ஒத்த ரோசா”
தூத்துக்குடி : தூத்துக்குடியில் பல்வேறு ஆண்களுடன் தகாத முறையில் பழகியதை கண்டித்ததால் காதலன் மற்றும் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து பெற்ற தாயை மகளே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி வண்ணார் 2வதுதெருவில் வசித்து வருபவர் முனியலட்சுமி , இவர் தனது கணவனைப் பிரிந்து ஒரு ஆண்டாக மூன்று பிள்ளைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
அவரது கணவரான ஆட்டோ ஓட்டுநர் மாடசாமி அருகில் தாமோதர நகரில் வசித்து வருகிறார். தம்பதியினருக்கு 17 வயதில் ஒரு மகள் ஒருவர் உள்ளார்.

தூத்துக்குடியில் அதிர்ச்சி
பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்த அந்த சிறுமி வயதுக்கு மீறி பல்வேறு நபர்களுடன் தகாத முறையில் பழகி வந்துள்ளார். முனியலட்சுமி வேலைக்கு செல்லும் போதெல்லாம் தனது காதலன் மற்றும் ஆண் நண்பர்களை வீட்டுக்கு வரவழைத்து தனிமையில் அத்துமீறியுள்ளார் அவர். இதனை அக்கப்பத்தினர் கூறியதையடுத்து ஆத்திரமடைந்த தாய் முனியலட்சுமி தன் மகள் ஆண்களிடம் பழகுவதை கண்டித்து உள்ளார்.

ஆண்களுடன் தகாத உறவு
இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுமி முத்தையாபுரத்தைச் சேர்ந்த தனது காதலன் மற்றும் அவர்களுடைய நண்பர்களுடன் சேர்ந்து பெற்ற தாய் என்றும் பாராமல் அவரை கொலை செய்துவிட்டு, எங்காவாது தப்பி சென்று மகிழ்ச்சியாக வாழலாம் என திட்டமிட்டுள்ளனர். அதன்படி இன்று அதிகாலை தூங்கிக்கொண்டிருந்த தாய் முனிய லட்சுமியை கழுத்தை நெறித்தும் அரிவாளால் வெட்டியும் சிறுமி மற்றும் ஆண்நண்பர் என மூவரும் சேர்ந்து கொலை செய்ததாக கூறப்படுகிறது .கொலை செய்துவிட்டு இரண்டு ஆண் நண்பர்களும் தப்பி சென்றுவிட்டனர்.

தாய் கொலை
பின்பு யாரோ இரண்டு நபர்கள் என் அம்மாவை கொலை செய்துவிட்டு சென்றுள்ளனர் என தென்பாகம் காவல் நிலையதுக்கு தகவல் தெரிவித்து போன் செய்து உள்ளார் அந்த சிறுமி . உடனே விரைந்து வந்த தென்பாகம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காவல்துறை சம்பவ இடத்தில் இறந்த பெண்ணின் மகளிடம் விசாரிக்க வேண்டிய முறையில் விசாரித்ததில் மகள் மற்றும் ஆண் நண்பர் என மூவரும் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது.

மகள் கைது
தொடர்ந்து தாயைக் கொன்ற 17 வயது மகளிடம் நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் கொலைக்கு உடந்தையாக இருந்த ஆண் நண்பர் குறித்தும் தீவிரமாக பல்வேறு கோணங்களில் விசாரித்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி நகரப்பகுதியில் தொடர்ச்சியாக கொலை சம்பவம் அரங்கேறி வரும் நிலையில் பெற்ற தாயை மகள் தனது காதலன் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி












Click it and Unblock the Notifications