திருச்செந்தூரில் நிலம்..திமுக நகராட்சி துணை தலைவர் மீது அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணீர் மல்க புகார்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தி.மு.க., நகராட்சி துணைத் தலைவர் உள்ளிட்டோர் தனது நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி தலைமையாசிரியர் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மேலரதவீதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (81). அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு சொந்தமான நிலத்தை தி.மு.க.வை சேர்ந்த திருச்செந்தூர் நகராட்சி துணைத் தலைவர் ரமேஷ், கவுன்சிலர் கண்ணன், பெண் கவுன்சிலரின் கணவர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் சூறையாடி அபகரிக்க முயற்சிப்பதாக வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் கண்ணீர் மல்க சோமசுந்தரம் கூறியிருப்பதாவது:
திருச்செந்தூர் மேலரதவீதியில் வீடு மற்றும் வீட்டுடன் இணைந்த காலியிடமும் உள்ளது. 300 ச.மீ. நிலத்தில் ஆஸ்பஸ்டாஸ் ஷீட் போட்ட கட்டிடத்தை கட்டி சொத்து வரி செலுத்தி வருகிறேன். அந்த இடத்தில் வெல்டிங் ஷாப் நடத்துவதற்கு வாடகைக்கு விட்டுள்ளேன்.
இடத்தில் அருகே பொதுபாதை உள்ளது. அந்த பாதையின் சர்வே எண்ணும், வெல்டிங் ஷாப் உள்ள இடத்தின் சர்வே எண்ணும் ஒன்றாக உள்ளது. தனி பட்டா இதுவரை வழங்கவில்லை.
இந்நிலையில், அந்த இடத்தை அபகரிக்கும் நோக்கில், தி.மு.க.,வை சேர்ந்த நகராட்சி துணைத் தலைவர் ரமேஷ், 9 வது வார்டு கவுன்சிலர் கண்ணன், 22 வது வார்டு கவுன்சிலரின் கணவர் கார்த்திகேயன் ஆகியோர் சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டு வருகின்றனர்.
அந்த நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இருந்தபோதிலும் நகராட்சி அதிகாரிகள் அவர்களுக்கு துணையாக செயல்பட்டு எனத்து தொந்தரவு கொடுத்து வருகின்றனர். எனக்கு நியாயம் கிடைக்க தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில் தலையீட்டு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் வீடியோவில் கூறியுள்ளார்.
தி.மு.க., நிர்வாகிகள் மீது ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஒருவர் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு நில அபகரிப்பு புகார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications