ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே! மத்தவங்க கனவு மட்டும் தான் காண முடியும்! மரிய வில்சன் ஒரே போடு
தூத்துக்குடி: அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் இருவருக்கு (திமுக & தவெக) மட்டும் தான் போட்டியே. நடுவில் இருப்பவர்கள் போட்டி என கூறுவார்கள். நானும் இருக்கிறேன் என சிலபேர் கமெண்ட் அடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் கனவு உலகத்தில் வாழட்டும் என கூறியுள்ளார் தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன். தேர்தலுக்காக தான் முதல்வர் விஜய் ஊர் ஊராக சென்று வருகிறார் என்று எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர். அவர்களிடம் ஷெட்யூல் வாங்கி விட்டு தான் செல்ல வேண்டுமா என்றும் அதிரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக நிதித் துறை அமைச்சர் மரிய வில்சன் திருநெல்வேலியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னையிலிருந்து விமான மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு வருகை தந்தார்.

பின்னர் விமான நிலையத்திலிருந்து தூத்துக்குடியில் உள்ள உலக பிரசித்தி பெற்ற பணியமாதா ஆலயத்தில் பிரார்த்தனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்," தமிழக அரசு வாங்கும் கடனகளை பொறுத்தவரை ஜிஎஸ்டி 3% கீழ் வரை வாங்கலாம். அந்த வரம்புக்குள் அரசாங்கம் கடன் வாங்கி இருக்கிறது.
மரிய வில்சன்
வேறு ஏதும் கிடையாது. முதல்வரும் கூறி இருக்கின்றார். கடன் சுமையை குறைக்க வேண்டும் என்று தலைவர் வழிகாட்டுதல்படி நடக்கின்றோம். கடந்த ஆட்சியில் மத்திய அரசு நிதி தரவில்லை என்று திமுக குற்றம் சாட்டியது. தற்போது முதல்வர் கிளியராக கூறி யிருக்கின்றார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக எது வேண்டுமானாலும் பிரதமரிடம் கேட்டு பெறுவோம். எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் நிதியாக இருந்தாலும் முறைப்படி வாங்குவோம்.
முதல்வர் விஜய்
தேர்தலுக்காக தான் முதல்வர் விஜய் ஊர் ஊராக சென்று வருகிறார் என்று எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர். அவர்களிடம் ஷெட்யூல் வாங்கி விட்டு தான் செல்ல வேண்டுமா. எந்த மாநிலம், மாவட்டம் செல்ல வேண்டும் என்றாலும் முதல்வர் செல்லலாம். அவர்கள் மட்டும் தான் தேர்தல் என்று பார்ப்பார்கள். தலைவர் அவ்வாறு பார்க்க மாட்டார். எங்களுக்கு போன தடவை சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு கூட அவர்கள் வழிவகை செய்யவில்லை. இடைத்தேர்தலுக்காக தான் நீங்கள் வருவீர்கள் என்று கூறுவது மூடத்தனம்.
இருமுனைப் போட்டி
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் இருவருக்கு மட்டும்தான் போட்டி (திமுக & தவெக) நடுவில் இருப்பவர்கள் போட்டி என கூறுவார்கள். தலைவர் சொன்னது போல திமுக & தவெக மட்டும் தான். சிலபேர் கமெண்ட் அடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இருவருக்கு மட்டும் தான் போட்டி என முதல்வர் கூறியது போல இன்றைக்கும் அதேதான் என்றைக்கும் அதேதான். மற்றவர்கள் கனவு உலகத்தில் வாழட்டும்.
நடிகர் தனுஷ்
எந்த ஒரு பிரச்சனை இல்லாமல் நிறைய விஷயங்கள் நடக்கிறது. CMT அப்ரூவல் போன்ற எந்த ஒரு தலையிடும் கிடையாது. ஆன்லைன் அப்ளிகேஷன் அப்படி கிடைத்து விடுகிறது. எல்லாருக்கும் எல்லாம், 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி கொண்டு வந்திருக்கிறார்கள். அது கண்ணுக்கு தெரியவில்லையா. அவர்கள் பணி குறை சொல்வது மட்டுமே. நடிகர் தனுஷ் - சிவகார்த்திகேயன் பற்றியெல்லாம் பேசமுடியாது. அதை விட்டு விடுங்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications
