புதுத்தாலி வாசத்துடன்.. மாலையும் கழுத்துமாக பூத்துக்குள் ஓடிய மணமக்கள்.. தூத்துக்குடி அருகே!
மணப்பாடு பூத்தில் புதுமண தம்பதி வாக்கு செலுத்தினர்
தூத்துக்குடி: மாலையும் கழுத்துமாக புது மணதம்பதி வாக்குச்சாவடிக்குள் நுழைந்ததை பார்த்தும் அங்கிருந்தோருக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.. பிறகுதான் ஜனநாயக கடமையாற்ற வந்துள்ளனர் என்பது தெரிந்தது!
தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. காலையில் இருந்தே இங்குள்ள வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர்.அதனால் மாலை வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது.
இந்த சமயத்தில்தான் ஒரு மணமண தம்பதி உள்ளே புகுந்தது.. உடன்குடி அருகே மணப்பாடு லைன் தெருவைச் சேர்ந்தவர் எம்பார்... இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்... இவர்தான் மாப்பிள்ளை.

கல்யாணம்
மணப்பாடு குண்டல் தெருவைச் சேர்ந்த விவினா என்பவர்தான் கல்யாண பொண்ணு.. மணப்பாடு புனித தூய ஆவி ஆலயத்தில் நேற்று கல்யாணம் சிறப்பாக முடிந்தது.. தாலி கட்டிய சிறிது நேரத்திலேயே மணமக்கள் 2 பேரும் வாக்களிக்க திட்டமிட்டனர்.

வாக்கு
இதற்காக இருவரும் மணக்கோலத்திலேயே மணப்பாடு புனித வளனார் மேல்நிலைப்பள்ளி பூத்துக்கு சென்று தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். மணமக்களை பார்த்த மற்ற வாக்காளர்கள் ஒருகணம் திகைத்தனர்.. பிறகுதான் ஓட்டு போட வந்திருந்திப்பதை அறிந்து மகிழ்ந்தனர்.

ஈர்ப்பு
அத்துடன் பூத்தில் இருந்த அனைவருமே மணமக்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். கல்யாணம் முடிந்த கொஞ்ச நேரத்திலேயே சென்று வாக்களித்த சம்பவம் அந்த பகுதி மக்களை ஈர்த்தது.

புதுமணத்தம்பதி
இதேபோல, ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி அருகே லக்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வந்தனர். மாலை வாக்குப்பதிவு முடியும் கடைசி நேரத்தில், அதாவது 4.45 மணிக்கு ரினோடிக்லுஸ் - நிகிதிதா என்ற புதுமணத்தம்பதியும், மாலையும் கழுத்துமாக வேகமாக வந்தனர்.. இதில் மணமகனுக்கு மட்டும் ஓட்டு இருந்தால், அதை செலுத்திவிட்டு சென்றார்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications