சாத்தான்குளம் சம்பவம்.. அம்மாவுக்கு உடம்பு சரியில்லை.. உடல்களை பெற்றுக் கொள்கிறோம்.. பெர்சி கண்ணீர்

Subscribe to Oneindia Tamil

சாத்தான்குளம்: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட அவர்களது உடல்களை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.

Recommended Video

    Sathankulam Incident : அம்மாவுக்கு உடம்பு சரியில்லை.. உடல்களை பெற்றுக் கொள்கிறோம்..-பெர்சி கண்ணீர்

    சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் (56) மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் (31). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்ததாக சொல்லப்படுகிறது.

    Relatives accepted to get the bodies of Father and son death incident in Sathankulam incident

    அவர்கள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் கோவில்பட்டி சிறையில் விசாரணை கைதிகளாக அடைத்து வைத்திருந்தனர். இந்த நிலையில் இருவரும் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்தனர். இந்த நிலையில் விசாரணைக் கைதிகள் இருவரும் மர்மமான முறையில் இறந்ததை எதிர்க்கட்சிகள், வணிகர் சங்கம், பொதுமக்கள் என எதிர்ப்பு தெரிவித்தனர்.

    புகாரின் பேரில் இரு போலீஸார் இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஒருவர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீஸார் மீது இரட்டை கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என ஜெயராஜின் மகள் பெர்சி கோரிக்கை விடுத்திருந்தார்.

    அதுவரை இருவரது உடல்களையும் பெற மாட்டோம் என உறவினர்கள் கூறியிருந்தனர். இவர்களது உடல்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு தந்தை- மகன் உடல்களை உறவினர்கள் பெற்றனர். இதுகுறித்து மகள் பெர்சி கூறுகையில் அம்மாவின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் உடல்களை பெறுகிறோம்.

    சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரிப்பதால் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தந்தை, சகோதரன் உடல்கள் மீதுள்ள கைரேகை, தடயங்களை வைத்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+