ஸ்டெர்லைட் வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டில் அரசு மேல்முறையீடு செய்யும்.. தூத்துக்குடி ஆட்சியர் உறுதி
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
Recommended Video

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
மக்களின் எதிர்ப்பு காரணமாக தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் இந்த ஆலை திறக்கப்பட்டு மீண்டும் இயக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் இன்று காலை ஸ்டெர்லைட் வழக்கு தொடர்பாக தற்போது வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் அந்த நிறுவனம் கேவியட் மனுதாக்கல் செய்துள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். ஸ்டெர்லைட் வழக்கு தொடர்பாக தமிழக அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன எடுக்க போகிறது என்று அவர் விளக்கம் அளித்தார்.
அதில், பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும். தமிழக அரசு இதற்காக தயாராகி வருகிறது. தற்போது தமிழக அரசு சட்ட நிபுணர்களுடன் இதற்காக பேசி வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. சட்ட ரீதியாக தீர்ப்பிற்கு எதிராக தமிழக அரசு போராடும். விரைவில் வழக்கு தொடுக்கப்படும்.
மக்கள் யாரும் களத்தில் இறங்கி போராட வேண்டாம். அரசு ஸ்டெர்லைட்டிற்கு எதிரான நிலைபாட்டைத்தான் எடுத்து இருக்கிறது. மக்கள் அவசரப்பட்டு போராட வேண்டாம் என்று ஆட்சியர் சந்தீப் நந்தூரி விளக்கம் அளித்தார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications