தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் -மண் மணம் மாறாமல் கொண்டாடிய கோவில்பட்டி விவசாயிகள்

தமிழ்ப் புத்தாண்டு தினமான சித்திரை முதல் தேதியில் விவசாயத்தை துவக்கினால் அந்த ஆண்டு முழுவதும் விவசாயம் செழிப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு அன்று விவசாயிகள் பொன் ஏர் பூட்டுவ

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: பொன் ஏர் என்பது விவசாயம் மற்றும் விவசாயத்திற்கு பயன்படும் கருவிகள், காளை மாடுகளுக்கு மரியாதை செய்வது மட்டுமின்றி, இந்த திருவிழாவின் முக்கிய நோக்கம் பாரம்பரிய விதைகளை பாதுகாப்பதும் ஆகும்.

 நீலகிரி, கோவை, சேலத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் நீலகிரி, கோவை, சேலத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

பாரம்பரிய விதைகளின் முளைப்பு திறன் குறித்தும் விவசாயிகள் அறிந்து கொள்கின்றனர். தமிழ்ப் புத்தாண்டு தினமான சித்திரை முதல் தேதியில் விவசாயத்தை துவக்கினால் அந்த ஆண்டு முழுவதும் விவசாயம் செழிப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

தொழுதுண்டு பின் செல்வார்

தொழுதுண்டு பின் செல்வார்


என்ற குறள் மூலம் உழவனை தொழுதுதான் மற்றவர்கள் உண்ண வேண்டும் என்று திருவள்ளுவர் கூறுகிறார். அது போன்று விவசாயிகள் தங்களது நிலத்தினை வணங்கும் நாளாக சித்திரை முதல் நாளை கடைபிடித்து வருகின்றனர். விவசாயம் செழித்து இருக்கும் வரை விவசாயிகள் மட்டுமின்றி தமிழர்களின் பண்பாடு என்றும் அழியாமல் இருக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு அன்று விவசாயிகள் பொன் ஏர் பூட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பாரம்பரிய விதைகளை பாதுகாக்க வலியுறுத்தும் பொன் ஏர் பூட்டும் திருவிழாவை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் வழக்கமான உற்சாகத்துடன் விவசாயிகள் கொணடாடினர். பொன் ஏர் பூட்டி உழவு செய்து வீட்டிற்கு திரும்பும் விவசாயிகள் மீது இல்லத்தரசிகள் மஞ்சள் நீர் ஊற்றி வரவேற்றனர். தஞ்சாவூர் அருகே உள்ள ஆச்சாம்பட்டி கிராமத்தில் விவசாயிகள், பெண்கள், குழந்தைகள் குடும்பத்தோடு திரண்டு நல்லேர் பூட்டி விளைநிலத்தை வணங்கினர்.

உழவுத்தொழில்

உழவுத்தொழில்

சூரிய குல க்ஷத்திரியர் ஜனக மகாராஜாவால் இதே போல் சித்திரை முதல்நாள் பொன்னேர் பூட்டி உழும்போது சீதா தேவி பூமிக்கு அடியில் இருந்து கிடைப்பாள் ஆகையால்தான் சீதாவை பூதேவி மகள் என்று கூறுவார்கள். இந்த நிகழ்வு இந்தியா முழுவதிற்கும் உரியது. பாரம்பரியமாக தென் மாவட்டங்களில் சித்திரை முதல் பொன்னேர் பூட்டி உழுது உழவுத் தொழிலை தொடங்குகின்றனர்.

பொன் ஏர் பூட்டிய விவசாயிகள்

பொன் ஏர் பூட்டிய விவசாயிகள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள நாகலாபுரம் புதுப்பட்டி கிராமத்தில் வழக்கமான உற்சாகத்துடன் பொன் ஏர் பூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதுப்பட்டி கிராமத்தில் ஒன்று திரண்ட விவசாயிகள் நிலத்தை உழுவதற்கு தேவையான ஏர் கலப்பைகளை சுத்தம் செய்தனர். பின் காளைகளுக்கும், ஏருக்கும் அலங்காரங்கள் செய்தனர். தொடர்ந்து சூலம் பார்த்து திசையை தேர்வு செய்து அந்த திசையில் உள்ள ஒரு விவசாயின் நிலத்தை தேர்வு செய்தனர். அங்கு காளைகள் பூட்டி, ஏர் கொண்டு உழவு செய்தனர்.

உழவர்கள் கொண்டாட்டம்

உழவர்கள் கொண்டாட்டம்

தற்போது காளைகள் அரிதாகி வருவதால், உழவுக்கு பயன்படுத்தும் டிராக்டர்களை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க செய்தனர்.
கிராமத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும், ஒற்றுமையுடன் உழவுப்பணியை முடித்தனர். பின் நவதானியங்களை இந்த நிலத்தில் விதைத்தனர். பொன் ஏர் திருவிழா முடிந்து வீடு திரும்பும் விவசாயிகள் மீது, கிராமத்து பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றி வரவேற்றனர். களைத்துப்போய் வீடு திரும்பிய விவசாயிகளுக்கு பானக்கரம், மோர் போன்ற நீராகாரங்களை வழங்கி மகிழ்ந்தனர்.

கிராம பாரம்பரியம்

கிராம பாரம்பரியம்

சித்திர மேழி வைபவம் தமிழில் பொன் ஏர் பூட்டும் திருவிழா என்று அழைக்கப்படும். சிலப்பதிகாரத்தில் இந்த திருவிழா பற்றி ஏர்மங்கலம் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது.தமிழர்களின் பண்பாடு இன்னும் கிராமப்பகுதிகளில் அழியாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் கிராம விவசாயிகள் ஒன்று கூடி ஒற்றுமையாக, பொன் ஏர் பிடித்து விவசாய நிலங்களை உழுது கொண்டாடி வருகின்றனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்திலும் பொன் ஏர் பூட்டும் நிகழ்வு பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்பட்டது.

உழவர்களுக்கு மரியாதை

உழவர்களுக்கு மரியாதை

பொன்ஏர் என்றும் மதிஏர் என்று அழைப்பார்கள். தங்கத்தால் செய்யப்பட்ட ஏர் கலப்பை கொண்டு வருடத்தின் முதல்நாளில் அரசன் உழவை தொடங்கிவைப்பான். இவ்வாறு அரசன் செய்வதிலிருந்து நாட்டு மக்களுக்கு அவன் தெரிவிப்பது முதலில் உழவன்தான் என்றும் அதேபிறகே அரசன் என்பதை பறைசாட்டுவதே ஆகும்.

விவசாயம் செழிக்கும்

விவசாயம் செழிக்கும்

மண் மனம் மாறாத இந்த பொன் ஏர் திருவிழா காலங்காலமாக நடந்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர். தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் விவசாயத்தை துவங்கினால் அந்த ஆண்டு முழுவதும் நிலம் செழித்து, பயிர் விளைச்சல் இருக்கும், என்ற நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கை இன்றும் கிராமங்களில் தொடர்ந்து வருவதாகவும் விவசாயிகள் கூறினர்.இந்த விதைகளின் முளைக்கும் திறனை கண்டறிந்து, விவசாயம் செய்யும் போது தரமான விதைகளை விதைப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

இறைவனுக்கு பிரசாதம்

இறைவனுக்கு பிரசாதம்

இறைவனுக்கு படைக்கப்பட்டிருந்த அரிசி வெல்லம் கலந்த கப்பியரிசி பிரசாரத்தை அனைவருக்கும் அளித்தனர். கப்பியரிசி என்பது முனை தீட்டாத பச்சரிசியை ஊறவைத்து வெல்லம், பொட்டுக்கடலை, சேர்த்து கலக்கப்பட்டது. பொன் ஏர் பூட்டிய பின்னர் ஏரிலிருந்து காளைகளை அவிழ்த்து, கலப்பை, மாடுகளையும்,படையல் பொருட்களையும் வீட்டிற்கு கொண்டுவந்து பத்திரப்படுத்தினர்.

English summary
Tamil New Year On The first day of chithirai is the beginning of agricultural operations in rain-fed fields. Tanjavur disrict, Thoothukudi district , Madurai district farmers celebration on a field.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X