திருச்செந்தூர் ரயில்வே ஸ்டேசனில் நடந்த அந்த சம்பவம்.. மொத்தமாக கொதித்து போன மக்கள்.. உடனே அதிரடி
தூத்துக்குடி: திருச்செந்தூர் ரயில்வே ஸ்டேஷனில் தமிழ் தெரியாத அலுவலர் பணியில் உள்ளதாகவும், அவர் டிக்கெட் கொடுப்பதற்குள் ரயில் புறப்பட்டு சென்றுவிட்டதாகவும் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்
ரயில்வே பணிகளில் தமிழர்கள் பணியில் இருந்தாலும்,வடமாநிலத்தவர் அதிக அளவில் நியமிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் நீண்ட நாட்களாக நிலவுகிறது. தமிழ் தெரியாத அல்லது தமிழர் அல்லாதோர் அதிக அளவு தமிழ்நாட்டில் பணியில் அமர்த்தப்படுவதால் தமிழர்கள் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ரயில்வே ஸ்டேஷனில் தமிழ் தெரியாத அலுவலர் பணியில் உள்ளதாகவும், அவர் டிக்கெட் கொடுப்பதற்குள் ரயில் புறப்பட்டு சென்றுவிட்டதாக புகார் எழுந்துள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று. மேலும் இதுமிகவும் விஷேசமான கோயில். இங்கு தினமும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுண்டரில், தமிழ் தெரிந்த அலுவலர் விடுப்பு எடுத்துள்ள நிலையில், தமிழ் தெரியாத அலுவலர் டிக்கெட் கொடுக்கும் பணிக்கு தாமதமாக வந்தாராம். அதற்குள் ரயில் புறப்பட்டுச் சென்றுவிட்டதால், அங்கு காத்திருந்த 300-க்கும் மேற்பட்டோர், ரயில்வே போலீசில் புகார் கூறினார்கள்.

அதைத்தொடர்ந்து, அனைத்து பயணிகளும் டிக்கெட் எடுக்காமல் நெல்லைக்கு ரயில் ஏறி சென்றுள்ளனர். பயணிகள் மற்றும் பக்தர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு தமிழ் தெரிந்த அலுவலர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
