திருச்செந்தூர் கோயிலில் குடமுழுக்கு! பக்தர்கள் அரோகரா முழக்கம்.. ட்ரோன்கள் மூலம் புனித நீர் தெளிப்பு
தூத்துக்குடி: முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக கருதப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று, 15 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை காண சுமார் 10 லட்சம் பக்தர்கள் வரை குவிந்துள்ளனர். பக்தர்களின் அரோகரா முழக்கத்திற்கு இடையில் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றிருக்கிறது.
அதிகாலை 6.15 மணிக்கு தமிழில் வேத மந்திரங்கள் ஓத, கும்பாபிஷேகம் தொடங்கியது. ஒரே நேரத்தில் ராஜகோபுரம் கும்ப கலசங்களுக்கும், மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர் என அனைத்து பரிவார மூர்த்தி சுவாமிகளுக்கும் புனித நீர் கொண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

குடமுழுக்கை காண பக்தர்கள் ஒரே இடத்தில் குவிந்தால் நெரிசல் ஏற்படும் என்பதால், ஆங்காங்கே எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நெரிசல் தவிர்க்கப்பட்டிருக்கிறது.
குடமுழுக்கை காண சுமார் 10 லட்சம் பக்தர்கள் குவிந்துள்ளனர். அவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறையினர் சிறப்பாக செய்துள்ளனர். காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் காவல்துறையினர் பக்தர்களின் பாதுகாப்புக்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்திருக்கின்றனர். குறிப்பாக சுழலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட 3 ரோந்து கார்களும், ஜபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட 10 பைக்குகளும் பக்தர்கள் மத்தியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கின்றன.
-
திருச்செந்தூர் முருகன் கோயிலில்! அமைச்சரிடமே ரூ 4000 பெற்று அர்ச்சகர்கள் முறைகேடு! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications