தூத்துக்குடியில் சரிந்த வாழையிலை.. வாசலில் கோலம் போட வந்த சிந்துஜாவை.. டக்னு துரத்திய 91 வயது தாத்தா
தூத்துக்குடி: தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக கொடூரம், பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் தந்து வருகிறது.. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் கொடுத்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது. என்ன நடந்தது தூத்துக்குடி முத்தையாபுரத்தில்?
தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் பகுதியில் வசித்து வருபவர் நிஷாந்த். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பெயர் சிந்துஜா.. 23 வயதாகிறது.. இவர்களது பக்கத்து வீட்டில் கந்தசாமி என்பவர் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். கந்தசாமிக்கு 91 வயதாகிறது..

வாழை மரக்கிளைகள்
கந்தசாமி தன்னுடைய வீட்டில் வாழை மரத்தை வளர்த்து வருகிறார். இந்த வாழைமரம் நன்றாக வளர்ந்துவிட்ட நிலையில், அந்த மரத்திலிருந்த வாழை இலை, நிஷாந்தின் காம்பவுண்டுக்குள் சென்றுவிட்டது.. அதுமட்டுமல்லாமல், வாழை மரத்தில் பூச்சிகள் இருந்ததால் அதனை அகற்றுமா, நிஷாந்தும், சிந்துஜாவும் கந்தசாமியிடம் சொல்லிருக்கிறார்கள். அதேபோல,
காம்பவுண்ட் சுவரை தாண்டி, தங்களுடைய வீட்டிற்குள் வாழை கிளைகள் விழுந்ததால், அந்த காய்ந்த கிளைகளை மட்டுமாவது அகற்றும்படியும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், கந்தசாமி அவைகளை அகற்ற மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இது தொடர்பாக இரு வீட்டுக்கும் தகராறு இருந்து வந்துள்ளது.
கோலம் போட்ட சிந்துஜா
இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு தங்கள் வீட்டு பகுதிக்குள் விழுந்துகிடந்த வாழை மரப்பகுதியை நிஷாந்த்தும், சிந்துஜாவும் வெட்டியிருக்கிறார்கள்.. இதையடுத்து, நேற்று முன்தினம் காலையில் சிந்துஜா, தன்னுடைய வீட்டின் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருக்கும்போது கந்தசாமி அரிவாளுடன் ஆவேசமாக வந்தார்..
கோலம் போட்டுக் கொண்டிருந்த சிந்துஜாவின் பின்புற காலில் அரிவாளால் வெட்டினார்.. பிறகு கந்தசாமி வாழை மரத்தின் இலைகளை ஏன் வெட்டினாய்? என்று கேட்டுக் கொண்டே சிந்துஜாவின் கையிலும் வெட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிந்துஜா உயிரை காப்பாற்றிக் கொள்ள தெருவில் ஓடி ஆரம்பித்தார்.. ஆனால், 91 வயது கந்தசாமி அரிவாளால், சிந்துஜாவை விரட்டிக் கொண்டே ஓடினார்..
ஆவேசம் அடங்காத தாத்தா
உயிருக்கு பயந்து சிந்துஜா அலறி அடித்து கொண்டு ஓடியும், கந்தசாமியின் ஆவேசம் அடங்கவில்லை.. விடாமல் துரத்திச் சென்று சிந்துஜாவை அரிவாளால் வெட்டினார்... பிறகு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து சிந்துஜாவை, கந்தசாமியிடமிருந்து காப்பாற்றினார்கள்..
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிந்துஜாவை மீட்டு, உடனடியாக அவரை காரில் ஏற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இப்போது சிந்துஜா தீவிர சிகிச்சையில் உள்ளார்.. இந்த சம்பவம் தொடர்பாக முத்தையாபுரம் போலீசார், கந்தசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாழையிலையை வெட்டியதால், இளம்பெண்ணையே 91 வயது தாத்தா ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்திலும் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications