Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூத்துக்குடியில் நம்பவே முடியலயே.. குழந்தையோடு தனிமையில் இருந்த பெண்ணை.. மலையில் பதுங்கிய 2 உருவம்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை, கத்திமுனையில் மிரட்டி, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். கைது நடவடிக்கையின்போது, காயமடைந்த 2 இளைஞர்களுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த அந்த பெண்ணுக்கு 20 வயதாகிறது.. திருமணமான இந்த பெண்ணின் கணவர் கேரளாவில் பணிபுரிந்து வருகிறார்.. இந்த தம்பதிக்கு 6 மாதத்தில் கைக்குழந்தை உள்ளது.

Thoothukudi young woman tuticorin

கைக்குழந்தையுடன் அவதி

இந்நிலையில், கடந்த 18ம் தேதி இரவு வீட்டில், கைக்குழந்தையுடன் தனியாக இருந்துள்ளார் இந்த பெண்.. அப்போது, நள்ளிரவில், 2 இளைஞர்கள் போதையில், அத்துமீறி வீட்டுக்குள் புகுந்து, அப்பெண்ணை கடுமையாக தாக்கியிருக்கிறார்கள்.. குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய 2 பேரும், அப்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இதை வெளியே சொன்னால் குழந்தை உட்பட குடும்பத்தில் உள்ள எல்லாரையும் கொன்றுவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.

இதனால் பயந்துபோன அந்த பெண்ணும், நடந்த சம்பவத்தை பற்றி எதுவும் சொல்லாமல் இருந்துள்ளார்.. ஆனால், கடுமையான பாதிப்புக்கும் உள்ளான அந்த பெண், அதிர்ச்சியில் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தார்.. பெண்ணின் முகம் சோகமாக இருப்பதை பார்த்த உறவினர்கள், கேரளாவில் உள்ள அவரது கணவருக்கு தகவல் தெரிவித்தனர்.

கோவில்பட்டி போலீசார்

இதையடுத்து, கணவரும் உடனடியாக ஊர் திரும்பி, மனைவியிடம் என்ன ஏதென்று விசாரித்தார்.. அப்போதுதான், கணவரிடம் நடந்த விபரங்களை எல்லாம் சொல்லி அழுதார்.. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கணவர், உடனடியாக கோவில்பட்டி மேற்கு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில், கோவில்பட்டி மகளிர் போலீசாரும் விசாரணையை கையிலெடுத்தனர்.

இறுதியில், இப்படியொரு கொடூரத்தை செய்தது, சாலைப்புதுாரைச் சேர்ந்த மாரியப்பன், 28, நாகலாபுரத்தைச் சேர்ந்த மாரி செல்வம், 27 என்பதை உறுதி செய்தனர்.. ஆனால், அதற்குள் அந்த இளைஞர்களில் ஒருவரான மாரியப்பன், வீரவாஞ்சி மலைப்பகுதியில் பதுங்கிவிட்டதாக தெரிகிறது. இதையறிந்த போலீசார், மாரியப்பனை பிடிக்க மலைப்பகுதிக்கே சென்றார்கள்..

மாரியப்பனை சுட்டுப்பிடித்தனர்

அப்போது, போலீசாரை கண்டதும், மாரியப்பன் தப்பியோட முயன்று, கீழே விழுந்துவிட்டார்.. இதில், அவரது வலது கால், கையில் முறிவு ஏற்பட்டது.. பின்னர் போலீசார் மாரியப்பனை சுற்றிவளைத்து பிடித்து, அவருக்கு மாவுக்கட்டு போட செய்தனர்.
அதேபோல, புதுக்கோட்டையில் பதுங்கியிருந்த மாரிசெல்வத்தையும் போலீசார் கைது செய்ய முயன்றனர். ஆனால், போலீசாரையே அரிவாளால் தாக்கிவிட்டு தப்ப முயன்றார் மாரிசெல்வம்.. இதனால், அவரது இடது காலில் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார், அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதில் உச்சக்கட்ட கொடுமை என்னவென்றால், கத்தி முனையில் பலாத்காரம் செய்துவிட்டு போன 2 கொடூரன்களும், மீண்டும் நள்ளிரவு, கதவை தள்ளிக்கொண்டு வந்து வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.. மீண்டும் குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து, அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.. பிறகு விடிகாலையில், 2 இளைஞர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்களாம். இதெல்லாம் கேட்டு தூத்துக்குடியே அதிர்ந்து போய் உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+