தூத்துக்குடி கொரோனா நோயாளி பலி.. கரும்பூஞ்சை பாதிப்பால் இறக்கவில்லை.. அரசு மருத்துவமனை டீன் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இன்று காலை பலியான கொரோனா நோயாளி, கரும்பூஞ்சை தொற்று காரணமாக பலியாகவில்லை என்று தூத்துக்குடி அரசு மருத்துவமனை டீன் விளக்கம் அளித்துள்ளார்.

Recommended Video

    தமிழகத்தில் அதிகரிக்கும் Black Fungus.. அறிவிக்கப்பட வேண்டிய நோய் பட்டியலில் சேர்த்த TN Government

    இந்தியாவில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க அதிகரிக்க புதிதாக பிளாக் பங்கஸ் எனப்படும் கரும் பூஞ்சை தாக்குதலும் ஏற்பட்டு வருகிறது. பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் கரும்பூஞ்சை கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளன.

    ராஜஸ்தான் மாநில அரசு இதை தங்கள் மாநிலத்தில் பரவும் பெரும்தொற்றாக அறிவித்துள்ளது. தெலுங்கானா மாநிலமும், இந்த கரும் பூஞ்சையை கவலையளிக்கும் நோய் பரவலாக அறிவித்துள்ளது.

    எப்படி

    எப்படி

    இந்த நிலையில் தமிழகத்திலும் கரும் பூஞ்சை தொற்று பரவி வருகிறது. இதுவரை தமிழகத்தில் 9 பேருக்கு இந்த தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று கரும் பூஞ்சை தொற்று காரணமாக தூத்துக்குடியில் ஒருவர் பலியாகிவிட்டதாக செய்திகள் வந்தது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நபர் கரும்பூஞ்சை தொற்றுக்கு இன்று காலை பலியானதாக செய்திகள் வெளியானது.

    ஆனால் மறுப்பு

    ஆனால் மறுப்பு

    ஆனால் இன்று காலை இறந்த கொரோனா நோயாளி, கரும்பூஞ்சை தொற்று காரணமாக பலியாகவில்லை என்று தூத்துக்குடி அரசு மருத்துவமனை டீன் விளக்கம் அளித்துள்ளார். இன்று காலை பலியான நபருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 57 வயதான இவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    மாற்றம்

    மாற்றம்

    அங்கு உடல்நிலை மோசமானதால் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முதல்நாள் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று காலை இவர் பலியானார். இவரின் உடலை பரிசோதனை செய்து, சிடி ஸ்கேன் எடுத்ததில் இவருக்கு பூஞ்சை தொற்று இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு இவருக்கு கொரோனா காரணமாக இதயத்தில் Bacterial Conjunctivitis infection ஏற்பட்டுள்ளது.

    காரணம்

    காரணம்

    இதுவே அவரின் மரணத்திற்கு காரணம். கரும்பூஞ்சை காரணமாக இவர் இறக்கவில்லை என்று தூத்துக்குடி அரசு மருத்துவமனை டீன் விளக்கம் அளித்துள்ளார். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் தமிழகத்தில் கரும்பூஞ்சை தொற்றால் யாரும் இறக்கவில்லை என்று கூறியுள்ளார். பொதுவாக இந்தியாவில் கொரோனா நோயாளிகள் பலருக்கு கரும்பூஞ்சை ஏற்பட தொடங்கி உள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்த நபர்களுக்கும், சிகிச்சை பெற்று வரும் சிலருக்கும் இந்தியாவில் பிளாக் பங்கஸ் எனப்படும் மியூக்கர்மைக்கோசிஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

     எப்படி ஏற்படுகிறது

    எப்படி ஏற்படுகிறது

    தீவிர கொரோனாவிற்கு மருந்துகள் எடுக்கும் நபர்கள் சிலருக்கு உடலில் எதிர்ப்பு சக்தி குறையும் நேரங்களில் இந்த பிளாக் பங்கஸ் நோய் தாக்குதல் ஏற்படுகிறது. இந்த மருந்துகள் காரணமாக உடலில் இயல்பாக இருக்கும் எதிர்ப்பு சக்தி குறைந்து, பலருக்கு கரும்பூஞ்சை தாக்குதல் நடக்கிறது. அதிலும் நீரழிவு நோய் உள்ளவர்கள், இருதயம் பாதிக்கப்பட்டவர்கள் பலர் கொரோனாவிற்கு எதிராக ஸ்டிராய்டு மருந்துகளை எடுக்கிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+