தூத்துக்குடி மேயர் யார்? ஸ்டாலினின் கிரீன் சிக்னலுக்காக காத்திருக்கும் முரட்டு பக்தரின் மகன் ஜெகன்!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கான போட்டியில் அமைச்சர் கீதா ஜீவனின் சகோதரர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகிக்கிறார்.
இவரை தவிர பெரியளவில் வேறு யாரும் மேயர் பதவிக்கு போட்டியிட முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காரணம் தூத்துக்குடி எம்.பி.யும், திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழியின் ஆசி ஜெகனுக்கு இருப்பதே ஆகும்.

தூத்துக்குடி மாநகராட்சி
தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்த உள்ள 60 வார்டுகளில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் 43 வார்டுகளில் வெற்றிபெற்றிருக்கிறது. இதனால் இந்த மாநகராட்சியை கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்காமல் திமுகவே மேயர் பதவியில் அமரும் என்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் முத்துநகரின் மேயர் ரேஸில் ஒன் அண்ட் ஒன்லி ஜெகன் பெரியசாமி மட்டுமே முந்துகிறார். இவர் சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவனின் உடன் பிறந்த சகோதரர் ஆவார்.

முரட்டு பக்தர்
கருணாநிதியின் முரட்டு பக்தர் என்றழைக்கப்பட்ட மறைந்த தூத்துக்குடி பெரியசாமியின் மகன் ஜெகன் என்பது கூடுதல் தகவலாகும். இவரது தந்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் மாவட்டச் செயலாளராக இருந்திருக்கிறார். ஆனால் ஒரு முறை கூட மந்திரியாகவோ, இன்னும் பிற அரசுப் பதவிகளிலோ இருந்ததில்லை. அதில் அவர் ஆர்வமும் காட்டியதில்லை. இந்நிலையில் அவரது மகனும், திமுக பொதுக்குழு உறுப்பினருமான ஜெகன் பெரியசாமிக்கு இப்போது மேயராகும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனிமொழி ஆசி
கடந்த 2019-ம் ஆண்டு தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் கனிமொழி போட்டியிடுகிறார் என்பது உறுதியானது முதல் அவருக்காக அந்த தொகுதி முழுவதும் தேர்தல் பணியாற்றியவர் ஜெகன் பெரியசாமி. அதேபோல் கனிமொழி கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளிலும், ஆய்வுப்பணிகளிலும் தொடர்ந்து பங்கேற்கக் கூடியவர் ஜெகன் பெரியசாமி. இதனால் இந்த தேர்தலில் அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கும் பொருட்டு மேயர் பதவிக்கு கனிமொழி எம்.பி. ஸ்டாலினிடம் சிபாரிசு செய்வார் எனத் தெரிகிறது.

துணை மேயர்
தூத்துக்குடி மாநகராட்சியை பொறுத்தவரை திமுகவில் மேயர் பதவிக்கு தான் பெரியளவில் போட்டியில்லையே தவிர துணை மேயர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது. மீனவ சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கோ அல்லது சிறுபான்மையின சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கோ தூத்துக்குடி துணை மேயர் பதவி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications