பிரபல நகைக் கடையில் பரபரப்பு! லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் என கூறி நகை சுருட்ட முயன்ற பெண்கள்! கைது
தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள பிரபல நகைக்கடையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் என கூறிக்கொண்டு, மோசடியில் ஈடுபட முயன்ற 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி, தமிழ் சாலை தென்பாகம் காவல் நிலையம் எதிரே பிரபல நகை உள்ளது. இந்தக் கடையில், டிப் டாப்பாக ஆடை அணிந்து வந்த 2 பெண்கள், கடைக்குள் சென்று நகைகளை வாங்குவதுபோல் பார்த்தனர். சுமார் 10 பவுன் நகை வரை தேர்வு செய்த பின்னர், அங்கிருந்த ஊழியர்களிடம் உங்களது கடை முதலாளி எங்கே என்றும், அவரை உடனே வரச் சொல்லுங்கள் என்றும் கட்டளையிட்டனர். அதற்கு ஊழியர், என்ன காரணம் என்று எங்களிடம் சொல்லுங்கள் என்று கேட்கவே, உடனடியாக அருகில் இருந்த மேனேஜரும், என்ன விவரம் எங்களுடன் சொல்லுங்கள் என்று கேட்டுள்ளார்.

உடனே அந்த இரண்டு பெண்களும், நாங்கள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் என்று கூறியதோடு, தங்களிடமிருந்த ஐடி கார்டையும் காட்டியுள்ளனர். மேலும், நாங்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு மீதி நகையை இலவசமாக தர வேண்டும் என்று கடை ஊழியர்களை மிரட்டியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த கடை ஊழியர்கள், அவர்கள் இருவரையும் அமர வைத்து விட்டு, கூல்டிரிங்ஸ் கொடுத்துள்ளனர். பின்னர் மத்திய பாகம் காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில், இன்ஸ்பெக்டர் ஐயப்பன் தலைமையிலான போலீசார், நகை கடைக்கு விரைந்து சென்று 2 பெண்களிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அந்த 2 பெண்களும் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் கிராமத்தைச் சேர்ந்த சரவணகுமார் என்பவரின் மனைவி பாபி என்ற ராஜலட்சுமி என்பதும், சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பெரியகடை கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவரின் மனைவி பரமேஸ்வரி என்றும் தெரியவந்தது.மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் என்று ஏமாற்றி, நகையை வாங்க முயன்றதும் அம்பலமானது.
இதையடுத்து போலீசார் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில், இவர்கள் தமிழகம் முழுதும் பல்வேறு நகை கடையில் கைவரிசை காட்டியதாக கூறப்படுகிறது.
தூத்துக்குடியில் நகைக்கடையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் என்று கூறி, நகையை சுருட்ட பார்த்த இரண்டு பெண்களை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications